For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன் போலவே ஆடலையே மும்பை... ஏன்?

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் போட்டியிலேயே ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து விட்டு வெற்றியை கொத்தாக அள்ளிக் கொண்டு போய் விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

மும்பை அணி இப்படி கொல்கத்தாவிடம் சுருண்டு போனதை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இத்தனைக்கும் மும்பையை விட பலவீனமான அணியாகவே இருந்தது கொல்கத்தா. ஆனால் காலிஸும், மணீஷ் பாண்டேவும் சேர்ந்து கொல்கத்தாவை கரை சேர்த்து விட்டனர்.

இப்படியே இருவரும் விளையாடிக் கொண்டிருக்க மாட்டார்களா என்று ஏங்கும் அளவுக்கு இருவரது ஆட்டமும் பிரமாதமாக இருந்தது.

அட்டகாசமான பேட்டிங்

அட்டகாசமான பேட்டிங்

கொல்கத்தாவின் பேட்டிங் நேற்று அட்டகாசமாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே மும்பை பவுலிங்கை திறமையாக சந்தித்து ரன் சேர்த்தனர்.

கம்பீர் போனாலும் கம்பீரம் போகலையே

கம்பீர் போனாலும் கம்பீரம் போகலையே

கம்பீர் டக் அவுட ஆகிப் போனாலும் கூட கொல்கத்தாவின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது.

பின்னி எடுத்த பாண்டே.. காலிஸ்

பின்னி எடுத்த பாண்டே.. காலிஸ்

மணீஷ் பாண்டேவும், காலிஸும் சேர்ந்து ரன் குவிப்பில் குதித்தனர். இருவரும் சம பலத்துடன் வெளுத்தெடுக்க மும்பை பவுலர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

163 ரன்கள் குவிப்பு

163 ரன்கள் குவிப்பு

இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைக் குவித்து விட்டது கொல்கத்தா.

மலிங்காவுக்கு 4

மலிங்காவுக்கு 4

மும்பை பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு மட்டும் நேற்று நிறைய விக்கெட்கள் கிடைத்தன. 4 விக்கெட்களை அவர் சாய்த்தார். ஆனால் அதற்குள் கொல்கத்தா கடுமையான ஸ்கோரை எட்டி விட்டது.

சொல்லி அடித்த சுனில் நரீன்

சொல்லி அடித்த சுனில் நரீன்

பின்னர் பேட் செய்ய வந்த மும்பையை, சொல்லிச் சொல்லி விக்கெட் வீழ்த்தினார் சுனில் நரீன். பேட் செய்யவே கடுமையாக போராடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஆட்ட நாயகன் காலிஸ்

ஆட்ட நாயகன் காலிஸ்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும் வீரம் சற்றும் குறையாமல் காரம் சற்றும் கம்மியாகாமல் பேட்டிங்கில் பிரமாதப்படுத்திய கொல்கத்தா வீரர் காலிஸ்தான் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன்.

46 பந்துகளில் 72 ரன்கள்

46 பந்துகளில் 72 ரன்கள்

காலிஸ் 46 பந்துகளைச் சந்தித்து 72 ரன்களைக் குவித்தார். அவர் ஆட்டமிழந்தது எதிர்பாராததாக அமைந்து போனது. 3 சிக்ஸ்களையும், 5 பவுண்டரிகளையும் விளாசினார் காலிஸ்.

கொல்கத்தாவின் பவுண்டரி மழை

கொல்கத்தாவின் பவுண்டரி மழை

நேற்றைய போட்டியின்போது கொல்கத்தா அணிதான் அதிகபட்சமாக 14 பவுண்டரிகளை விளாசியது. சிக்ஸ்களின் எண்ணிக்கை 5 ஆகும். மும்பை தரப்பில் 7 பவுண்டரிகளே அடிக்கப்பட்டன. சிக்ஸர்களும் 2 மட்டுமே.

ஆறுதல் கொடுத்த அம்பட்டி ராயுடு

ஆறுதல் கொடுத்த அம்பட்டி ராயுடு

மும்பை அணிக்கு ஆறுதல் தந்தது அம்பட்டி ராயுடு மட்டுமே. 40 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

பிரமாதம் சுனில்

பிரமாதம் சுனில்

கொல்கத்தா அணியின் சுழற்பந்துப் புயல் சுனில் நரீன் தனது வரவை இந்த முறையும் ஆணித்தரமாக சொல்லிச் சென்றார். 4 ஓவர்கள் வீசிய அவர் 20 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களைச் சாய்த்தார்.

மலிங்கா ரொம்ப லேட்

மலிங்கா ரொம்ப லேட்

மும்பையின் மலிங்கா அதே போல 4 விக்கெட்களைச் சாய்த்தார். ஆனால் கடைசி நேரத்தில்தான் அவரால் நிறைய விக்கெட்களை எடுகக முடிந்தது. இவர் கொடுத்த ரன்கள் 23. வீசிய ஓவர்கள் 4.

பிரமாத ரன் ரேட்

பிரமாத ரன் ரேட்

கொல்கத்தா அணியின் ரன் ரேட் 8.15 ஆக இருந்தது. ஆனால் மும்பை ரன் ரேட் 6.10தான்.

பெஸ்ட் கஞ்சன்

பெஸ்ட் கஞ்சன்

கொல்கத்தா பந்து வீச்சாளர் மார்னி மார்க்கல்தான் கஞ்சத்தனமாக ரன் கொடுத்தார். அவர் வீசிய ஓவர்கள் 4. வீழ்த்திய விக்கெட் 1. கொடுத்த ரன்கள் 16 மட்டுமே.

தாராள நாயகன் கோரி ஆண்டர்சன்

தாராள நாயகன் கோரி ஆண்டர்சன்

அதேசமயம் மும்பை அணியின் கோரி ஆண்டர்சன் 3 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.

பெஸ்ட் ஸ்டிரைக்கர் சூர்யகுமார் யாதவ்

பெஸ்ட் ஸ்டிரைக்கர் சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ் 5 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்களைக் குவித்தார். இவரது சராசரி 260 ஆகும்.

பெஸ்ட் பார்ட்னர்கள் பாண்டே- காலிஸ்

பெஸ்ட் பார்ட்னர்கள் பாண்டே- காலிஸ்

கொல்கத்தாவின் காலிஸும், பாண்டேவும் சேர்ந்து 15.2 ஓவர்கள் நின்று 131 ரன்களைக் குவித்து விட்டனர்.

ஆப் அடிக்க எடுத்த ரன்கள்

ஆப் அடிக்க எடுத்த ரன்கள்

காலிஸ் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். பாண்டே 42 பந்துகளில் ஆப் அடித்தார்.

Story first published: Thursday, April 17, 2014, 11:43 [IST]
Other articles published on Apr 17, 2014
English summary
Kolkata Knight Riders thrashed defending champions Mumbai Indians by 41 runs in the opening match of IPL 7 here on Wednesday night (April 16). Scorecard; Over-by-over runs After scoring 163/5 in 20 overs, KKR bowlers kept MI to 122/7 in 20 overs. Jacques Kallis, Manish Pandey and Sunil Narine were the stars for KKR.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X