For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7–வது ஐ.பி.எல். முதலாவது போட்டி: மும்பை அணியை 41 ரன்களில் வீழ்த்தியது கொல்கத்தா!!

By Mathi

அபுதாபி: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது.

7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று இரவு தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகயும் மோதின. ஐ.பி.எல். வரலாற்றில் இது 400-வது ஆட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணியின் காம்பீரும், காலிசும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

காம்பீர் 'முட்டையுன்' கிளீன் போல்டு

காம்பீர் 'முட்டையுன்' கிளீன் போல்டு

2-வது ஓவரில் மலிங்கா வீசிய யார்க்கரில் காம்பீர் 8 பந்துகளை எதிர்கொண்டும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கிளீன் போல்டு ஆனார்.

காம்பீரின் 8வது டக் அவுட்

காம்பீரின் 8வது டக் அவுட்

இதுவரையிலான ஐ.பி.எல். போட்டிகளில் காம்பீர் டக்-அவுட் ஆவது இது 8-வது முறையாகும்.

மனிஷ் பாண்டே அசத்தல் தொடக்கம்

மனிஷ் பாண்டே அசத்தல் தொடக்கம்

பின்னர் காலிசுடன் மனிஷ் பாண்டே கை கோர்த்தார். கோரி ஆண்டர்சனின் 4-வது ஓவரில் பாண்டே இந்த தொடரின் முதல் பவுண்டரியையும், சிக்சரையும் பறக்க விட ரசிகர்கள் துள்ளி குதித்து ஆராவரம் செய்தனர்.

10 ஓவரில் 63 ரன்கள்..

10 ஓவரில் 63 ரன்கள்..

மும்பை அணி பொறுமையாக பந்து வீசியதால் 10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ரன்களே எடுத்திருந்தது.

தப்பித்த காலிஸ்

தப்பித்த காலிஸ்

பின்னர் காலிஸும் பாண்டேவும் ரன் சேகரிப்பில் வேகம் காட்டிக் கொண்டிருந்தனர். காலிஸ் 34 ரன்களை எடுத்த நிலையில் ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து அபாரமாக தப்பித்தார்.

ஓஜா வாரிக் கொடுத்தார்

ஓஜா வாரிக் கொடுத்தார்

முதல் 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, தமது கடைசி ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கினார். அதில் காலிஸ் 2 சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசினார்.

பாண்டே 64 ரன்கள்..

பாண்டே 64 ரன்கள்..

கொல்கத்தாவின் ஸ்கோர் 135 ரன்களாக உயர்ந்த போது, மலிங்கா பந்தில் பாண்டே அவுட் ஆனார். அவர் 53 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

காலிஸ் 72 ரன்களில்..

காலிஸ் 72 ரன்களில்..

பின்னர் வந்த உத்தப்பா ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகிப் போனார். கொல்கத்தா அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவிய காலிஸ் 72 ரன்களில் அவுட் ஆனார். அவர் 46 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 3 சிக்சர்களை அடித்து கேட்ச் ஆனார்.

20 ஓவரில் 163 ரன்கள்..

20 ஓவரில் 163 ரன்கள்..

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

மலிங்கா 4, ஜாகீர்கான் 1 விக்கெட்டு

மலிங்கா 4, ஜாகீர்கான் 1 விக்கெட்டு

மலிங்கா 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜாகீர்கானும் அதே 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

தடுமாறிய மும்பை

தடுமாறிய மும்பை

முதல் முறையாக மும்பை அணிக்காக இறங்கிய மைக் ஹஸ்சி தடுமாறினார். 13 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சுனில் நரினின் சுழற்பந்தில் கிளீன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆதித்ய தாரே 24 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

தத்தளித்த மும்பை

தத்தளித்த மும்பை

அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 27 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 48 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 2 ரன்னிலும், ஹர்பஜன்சிங் ரன் ஏதுமின்றியும், சிதம்பரம் கவுதம் 7 ரன்னிலும் வெளியேறினர்.

20 ஓவரில் 122 ரன்கள்தான்.

20 ஓவரில் 122 ரன்கள்தான்.

20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 7 விக்கெட்டுக்கு 122 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

நரின் 4 விக்கெட்டுகள்..

நரின் 4 விக்கெட்டுகள்..

கொல்கத்தா தரப்பில் சுனில் நரின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆட்ட நாயகன் காலிஸ்

ஆட்ட நாயகன் காலிஸ்

72 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த காலிஸ் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Thursday, April 17, 2014, 8:15 [IST]
Other articles published on Apr 17, 2014
English summary
The seventh Indian Premier League(IPL) kicked off on Wednesday with an emphatic 41-run win for Kolkata Knight Riders over Mumbai Indians, as the evergreen Jacques Kallis set the tone with a 46-ball 72 before Sunil Narine completed the task with four wickets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X