For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓ.கே., முதல் போட்டியில் யாரு ஜெயிப்பாங்க?..

அபுதாபி: 7வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபியில் நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் முதல் போட்டியில் சந்திக்கவுள்ளன.

முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவும், நடப்புச சாம்பியன் மும்பையும் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இருவருமே சாமானியர்கள் அல்லதான் என்றாலும், மும்பை அணி சற்று கூடுதல் வலுவுடன் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

2012ல் சாம்பியன் கொல்கத்தா

2012ல் சாம்பியன் கொல்கத்தா

2012ல் நடந்த தொடரில் சாம்பியன் ஆன அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தற்போதைய கேப்டன் கெளதம் கம்பீர் தலைமையில் அந்த சாதனையை கொல்கத்தா அப்போது நிகழ்த்தியது.

2013 சாம்பியன் மும்பை

2013 சாம்பியன் மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு சாம்பியன் ஆனது. இரு அணிகளுமே தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை சுவைத்துள்ளனர்.

10 முறை பலத்த அடி

10 முறை பலத்த அடி

இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 10 முறை மும்பையே வென்றுள்ளது.

ஆனால் வரலாறும் சறுக்குமே

ஆனால் வரலாறும் சறுக்குமே

ஆனால் வெறும வரலாற்றை வைத்து சோறு சாப்பிட முடியாது. ஒரே ஒரு ஓவர் கூட கிரிக்கெட்டில், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும், வரலாற்றைப் புரட்டிப் போடும் என்பதால் இன்று இருவரும் எப்படி ஆடப் போகிறார்கள் என்பதை வைத்துத்தான் எதையும் சொல்ல முடியும்.

இரு அணியிலும் மாற்றங்கள்

இரு அணியிலும் மாற்றங்கள்

மேலும் இரு அணிகளிலுமே சில வீரர்கள் மாறியுள்ளனர். எனவே அணியின் விகிதம் எப்படி அமைகிறது என்பதை வைத்தே இருவரது திறனையும் மதிப்பீடு செய்ய முடியும் என்ற நிலை.

சச்சின் இல்லை.. ஆனால் ஹஸ்ஸி இருக்கிறார்

சச்சின் இல்லை.. ஆனால் ஹஸ்ஸி இருக்கிறார்

மும்பை அணியில் சச்சின் இல்லை. அதேசமயம், சென்னைக்கு இது நாள் வரை வலு கொடுத்து வந்த மைக் ஹஸ்ஸி வந்திருக்கிறார். அமர்க்களமான ஆரம்பத்தை அவரால் தர முடியும்.

6 வருடத்தில் 2வது அணி

6 வருடத்தில் 2வது அணி

மைக் ஹஸ்ஸி கடந்த 6 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஆடி வந்த திறமையான அருமையான வீரர். முதல் முறையாக அணி மாறி மும்பைக்கு வந்துள்ளார்.

மும்பையின் முத்திரை வீரர்கள்

மும்பையின் முத்திரை வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முத்திரை வீரர்களாக ரோஹித் சர்மா, கோரி ஆன்டர்சன், லசித் மலிங்கா, கீரன் போலார்ட், அம்பட்டி ராயுடு, பிரக்யான் ஓஜா ஆகியோர் இருப்பார்கள்.

கொல்கத்தாவின் படை பலம்

கொல்கத்தாவின் படை பலம்

கொல்கத்தாவின் படை பலமாக கம்பீர், ராபின் உத்தப்பா, வினய் குமார், யூசுப் பதான், ஜேக்கஸ் கல்லிஸ், சுனில் நரீன் ஆகியோர் இருக்கலாம்.

அணிகள் - மும்பை

அணிகள் - மும்பை

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா, லசித் மலிங்கா, கீரன் போலார்ட், ஹர்பஜன் சிங், அம்பட்டி ராயுடு, மைக் ஹஸ்ஸி, ஜாகிர் கான், பிரக்யான் ஓஜா, கோரி ஆன்டர்சன், ஜோஷ் ஹேஸல்வுட், கெளதம், ஆதித்யா தரே, அபூர்வ் வாங்கடே, மன்சந்த் டி லாங்கே, கிருஷ்ணார் சந்தோகி, பென் டங்க், பவான் சுயால், சுஷாந்த் மராத்தே, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷ்ரேயாஸ் கோபால், ஜலஜ் சக்ஸேனா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கம்பீர், சுனில் நரீன், ஜேக்கஸ் கல்லிஸ், ராபின் உத்தப்பா, யூசுப் பதான், ஷாகிப் அல் ஹசன், உமேஷ் யாதவ், வினய் குமார், மார்னி மார்க்கல், பியூஷ் சாவ்லா, மணீஷ் பாண்டே, வீர் பிரதாப் சிங், கிறிஸ் லின், ஆண்ட்ரே ரஸ்ஸல், எஸ்.எஸ்.மண்டல், பாட் கம்மின்ஸ், தேபப்ரதா தாஸ், சூர்யகுமார் யாதவ், மன்வீந்தர் பிஸ்லா, ரியான் டெஸ்சாட், குல்தீப் யாதவ்.

வாங்க பார்க்கலாம்

வாங்க பார்க்கலாம்

எனவே இரு அணிகளிலும் நல்ல படை வீரர்கள் உள்ளனர். எனவே இன்றைய போரில், சிறந்த உத்தியை வகுக்கும் அணியே வெல்லும் என்பது நிச்சயம்

மறக்காதீங்க.. ராத்திரி 8 மணிக்குப் போட்டி தொடங்குதாம்.

Story first published: Wednesday, April 16, 2014, 20:35 [IST]
Other articles published on Apr 16, 2014
English summary
The wait is over. The D-day is here. The seventh edition of the Indian Premier Leauge (IPL 7) gets under way here today with defending champions Mumbai Indians facing 2012 winners Kolkata Knight Riders. The Sheikh Zayed Stadium will be packed tonight as the tickets for the IPL 7 opener have been sold out. It promises to be an exciting clash with MI holding slight advantage over KKR.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X