For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்..டா.... நாளை சென்னை ஆடுதப்பா!

ஷார்ஜா: 6வது ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொண்டு சீனிவாசன் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சஜாப் அணியை நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி 7வது ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலையி்ல்தான் முதலில் இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் புண்ணியத்தால் புது வாழ்வு கிடைத்து தொடரில் பங்கேற்றுள்ளது.

கலக்கல் அணி

கலக்கல் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே நல்ல வலுவான அணியாக திழ்ந்து வருகிறது. காரணம், கேப்டன் டோணி.

3 சீசன்களில் மிரட்டிய அணி

3 சீசன்களில் மிரட்டிய அணி

அதிலும் கடந்த 3 சீசன்களில் சென்னை உண்மையிலேயே அனைத்து அணிகளுக்கும் நல்ல மிரட்டலைக் கொடுத்தது.

சர்ச்சைக்குள் சிக்கி

சர்ச்சைக்குள் சிக்கி

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட பிக்ஸிங் சர்ச்சையில் சென்னையும் சிக்கியது. அதன் முக்கிய அதிகாரிகள், சில வீரர்கள் இந்த சர்ச்சையில் மாட்டினர். இன்னும் அது முடியவில்லை. நீண்டபடியே உள்ளது.

பிளமிங் கருத்து

பிளமிங் கருத்து

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் சில ஆடுகளத்திற்கு வெளியிலான பிரச்சினைகள் அணியைப் பாதிக்கவே செய்துள்ளது. அது நிச்சயம் கவனச் சிதறலாகவும் அமையும். ஆனால் அதைத் தாண்டி நாம் போயாக வேண்டும். வேறு வழியில்லை என்றார்.

பெஸ்ட் அணி

பெஸ்ட் அணி

இதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் இருக்கும் அணியிலேயே பெஸ்ட் அணியாக சென்னையைத் தாராளமாக சொல்லலாம்.

ஸ்டார்கள் இல்லாவிட்டாலும்

ஸ்டார்கள் இல்லாவிட்டாலும்

கடந்த காலங்களில் சென்னையின் நீக்க முடியாத தூண்களாக திகழ்ந்த மைக் ஹஸ்ஸி, அல்பி மார்க்கல் ஆகியோர் இப்போது அணியில் இல்லை. இருந்தாலும் கூட அணி வலுவாகவே உள்ளது.

பந்து வீச்சுக்கு பத்ரி

பந்து வீச்சுக்கு பத்ரி

அதேபோல மேற்கு இந்தியதீவுகளைச் சேர்ந்த சாமுவேல் பத்ரியின் வருகை அணியின் சுழற்பந்து வீச்சை பலமாக்கியுள்ளது.

ஷேவாக் இடம் பெற்ற பஞ்சாப் அணி

ஷேவாக் இடம் பெற்ற பஞ்சாப் அணி

மறுபக்கம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் பெய்லியை கேப்டனாகக் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் வீரேந்திர ஷேவாக் இடம் பெற்றுள்ளார். இவர் இதுவரை நல்ல பார்முக்கு வரவில்லை என்ற போதிலும் திடீரென பார்முக்கு வந்து விட்டால் சிக்கல்தான்.

மிட்சல் ஜான்சன்

மிட்சல் ஜான்சன்

அதேபோல மிட்சல் ஜான்சன் அணியில் இருக்கிறார். அதிரடியான வேகப் பந்து வீச்சாளர் மிட்சல்.

வாய்ப்புள்ளது..

வாய்ப்புள்ளது..

மொத்தத்தில் பஞ்சாபை விட சென்னையின் கையே ஓங்கியுள்ளது. இதை வைதது ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்று வெ்யிட்டாக ஆடினால் பஞ்சாபை சட்னியாக்கி சாதிக்கலாம்... பார்க்கலாம்.

அணிகள் - சென்னை

அணிகள் - சென்னை

டோணி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேயன் பிராவோ, பாப் டு பிளசிஸ், மெக்கல்லம், வேயன் ஸ்மித், ஆசிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, சாமுவேல் பத்ரி, பென் ஹில்பென்ஹாஸ், மாட் ஹென்றி, அபராஜித், மிதுன் மன்ஹாஸ், ஈஸ்வர் பாண்டே, பவன் நேகி, விஜய் சங்கர், ரோனித் மோரே, ஜான் ஹேஸ்டிங்ஸ்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், மன்னான் வோஹ்ரா, வீரேந்திர ஷேவாக், மிட்சல் ஜான்சன், சட்டேஸ்வர் புஜாரா, ஷான் மார்ஷ், விருத்திமான் சாஹா, திசரா பெரேரா, கிளன் மேக்ஸ்வெல், ரிஷி தவன், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, அக்ஷர் படேல், பியூரன் ஹென்டிரிக்ஸ், கரன்வீர் சிங், முரளி கார்த்திக், ஷிவம் சர்மா, சர்துல் தாக்கூர், எல்.பாலாஜி, பர்வீந்தர் அவானா, குர்கிரீத் சிங் மான், மந்தீப் சிங்.

Story first published: Thursday, April 17, 2014, 17:03 [IST]
Other articles published on Apr 17, 2014
English summary
Distracted to an extent by off-field furores surrounding them, two-time former champions Chennai Super Kings would look to bring the focus back on their cricketing prowess when they take on a revamped Kings XI Punjab in their IPL opener here on Friday. The Chennai outfit, the most dominant team in the past three seasons, is still reeling under the spot-fixing scandal, in which some of its top officials have been implicated besides a few players also being under the scanner.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X