For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'டெவிலை' வீழ்த்தி வெற்றித் 'தவில்' வாசிக்குமா சென்னை?

அபுதாபி: முதல் போட்டியில் முக்கி முக்கி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட பஞ்சாப் போட்ட போட்டால் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று தனது 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைச் சந்திக்கிறது.

முதல் போட்டியில் பவுலிங் மற்றும் அதிர்ஷ்டம் கைவி்ட்டதால் சோர்வடைந்த ரசிகர்கள் 2வது போட்டியில் சென்னை பின்னி எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை இன்று இரவு 8 மணிக்கு அபுதாபியில் சந்திக்கிறது.

முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக தோற்ற நிலையில் டெல்லியைச் சந்திக்கிறது சென்னை. அதேசமயம், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வீறு கொண்டெழுந்து வென்ற தெம்பில் டெல்லி உள்ளது.

பஞ்சாபிடம் பெரும் தோல்வி

பஞ்சாபிடம் பெரும் தோல்வி

தனது முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபைச் சந்தித்தது சென்னை. அப்போட்டியில் சிறப்பான பேட்டிங் மூலம் 205 ரன்களை அது குவித்தது. ஆனால் துரதிர்ஷ்டசமாக மேக்ஸ்வெல் போட்ட போட்டால், 7 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நம்மை வீ்ழ்த்தியது பஞ்சாப்.

ஓட்டைப் பந்து வீச்சு

ஓட்டைப் பந்து வீச்சு

முதல் போட்டியில் பேட்டிங் சூப்பராக இருந்தது. ஆனால் பந்து வீச்சு சொதப்பலானது.

டேரிங் டெல்லி

டேரிங் டெல்லி

மறுபக்கம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் போட்டியில் பெங்களூரிடம் தோற்றாலும் கூட, கொல்கத்தாவை பின்னி எடுத்து விட்டது.

ஸ்மித், மெக்கல்லத்தை நம்பி

ஸ்மித், மெக்கல்லத்தை நம்பி

இன்றைய போட்டியிலும் சென்னைக்கு தொடக்க வீரர்கள் வேயன் ஸ்மித்தும், மெக்கல்லமும் சிறப்பான தொடக்கத்தைத் தருவார்கள் என்று நம்பலாம்.

மேக்ஸ்வெல் கொடுத்த மென்ட்டல் டார்ச்சர்

மேக்ஸ்வெல் கொடுத்த மென்ட்டல் டார்ச்சர்

கடந்த போட்டியில் நமது பவுலர்களுக்கு மேக்ஸ்வெல்லும், டேவிட் மில்லரும் சேர்ந்து செமத்தியான மென்ட்டல் டார்ச்சரைக் கொடுத்து விட்டார்கள்.

ஆசிஷு.,. பாத்துப் போடுப்பா

ஆசிஷு.,. பாத்துப் போடுப்பா

நமது பந்து வீச்சாளர்கள் ஆசிஷ் நெஹ்ராவும், மோஹித் சர்மாவும் எதிர்பார்த்த அளவுக்கு பஞ்சாப் வீரர்களை பயமுறுத்தத் தவறி விட்டனர்.

அஸ்வினை கூட அடிச்சு ஆடினார்கள்

அஸ்வினை கூட அடிச்சு ஆடினார்கள்

எப்போதும் கை கொடுக்கும் அஸ்வினையும் கூட பஞ்சாப் வீரர்கள் விடவில்லை. அஸ்வினும் எதிர்பார்த்த அளவுக்கு பரிபூரணமான பெஸ்ட் பந்து வீச்சை கொடுக்கவில்லை.

காம்பினேஷனை கலக்கிப் போடுங்க டோணி

காம்பினேஷனை கலக்கிப் போடுங்க டோணி

எனவே இன்றைய போட்டியி்ல் பவுலிங் காம்பினேஷனை டோணி மாற்றி அமைத்தால்தான் அணிக்கு நல்லது.

திணேஷ் இருக்காரு... உஷார்...

திணேஷ் இருக்காரு... உஷார்...

கெவின் பீட்டர்சன் இல்லாத டெல்லி அணிக்கு திணேஷ் கார்த்திக் கேப்டனாக பணியாற்றுகிறார். அவரது பேட்டிங் கொல்கத்தா போட்டியின்போது கிளாஸ் ஆக இருந்தது. அதேபோல ஜே.பி.டுமினியின் பேட்டிங்கும் அபாயகரமானது.

ராஸ்.. டென்ஷனான நல்லதுதானே...

ராஸ்.. டென்ஷனான நல்லதுதானே...

ராஸ் டெய்லர் டென்ஷனாகி வி்ட்டால் தப்பு செய்து அவுட்டாகி விடுகிறார். இல்லாவிட்டால் அடி பின்னி விடுகிறார். இவரையும் சமாளிக்க வேண்டும்.

பார்க்கலாம். பந்து வீச்சு இன்று கை கொடுத்தால், டெல்லியை சாய்க்கலாம்.

Story first published: Monday, April 21, 2014, 17:12 [IST]
Other articles published on Apr 21, 2014
English summary
Handed a shock defeat in their tournament opener, former champions Chennai Super Kings would be eager to bounce back against a resurgent Delhi Daredevils in the Indian Premier League (IPL) here on Monday. Chennai lost to Kings XI Punjab by six wickets on Friday despite posting a mammoth 205. The two-time champions were found wanting in the bowling department as Punjab chased down the seemingly tough target with seven balls to spare.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X