For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸையும் பந்தாடுமா ராயல் சேலஞர்சர்ஸ் பெங்களூர்?

By Veera Kumar

துபாய்: நடப்பு ஐ.பி.எல்.7வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்திய மகிழ்ச்சியுடன் இன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

7வது ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. இதில் 2வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியிருந்தது.

Ipl 7: RCB take on MI today

உலககோப்பை இறுதி போட்டியில் மரண மொக்கை போட்டு விமர்சனத்துக்கு ஆளான பெங்களூர் அணியின் யுவராஜ்சிங், டெல்லியுடனான போட்டியில் பழைய பன்னீர்செல்வமாக மாறி 52 பந்துகளில் 84 ரன்களை குவித்து அவல்மென்றவர்கள் வாய்க்கு பூட்டுப்போட்டார். விராத் கோஹ்லியும் தன்பங்குக்கு 49 ரன்களை அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த உற்சாக பார்முடன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவிய வெறியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸை இன்று எதிர்கொள்கிறது பெங்களூர்.

மும்பை அணியில் ஜாகீர்கான் மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தவிர்த்துப்பார்த்தால் பவுலிங் மகா மோசமாக உள்ளது. பேட்டிங் வரிசையும் சொல்லிக்கொள்வதைப்போல இல்லை. கொல்கத்தாவின் சுனில் நரைன் சுழலை சந்திக்க முடியாமல் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தனர்.

அம்பத்தி ராயுடு, ரோகித் ஷர்மா, ஆதித்யா தாரே ஆகியோரை தவிர மும்பையின் வேறு எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்னை அடிக்க முடியாமல் அவுட்டாகினர்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலை 4 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டி துவங்குகிறது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி:

விராத் கோஹ்லி, ஏ.பி. டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ்சிங், மிச்சேல் ஸ்டார்க், அல்பி மோர்க்கல், வருண் ஆரோன், அசோக் டிண்டா, பார்த்திவ் பட்டேல், முத்தையா முரளிதரன், ரவி ராம்பால், நிக் மட்டின்சன், லர்ஷல் பட்டேல், விஜய் ஜோல், அபு நெக்கிம், சச்சின் ரானா, ஜகாட்டி, சந்தீப் பாரியர், தன்மே மிஸ்ரா, யோகேஷ் டேகாவாலே, யுஸ்வேந்திரா சகால்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோகித் ஷர்மா, மலிங்கா, பொல்லார்டு, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு, மைக்கேல் ஹஸ்சி, ஜாகீர்கான், பிரக்யான் ஓஜா, கோரி ஆன்டர்சன், ஜோஸ் ஹஸ்லிவுட், சிஎம் கவுதம், ஆதித்ய தாரே, அபூர்வ்வான்கடே, மார்சன்ட் டி லன்கே, கிருஷ்மர் சந்தோகி, பென் டன்க், பவான் சுயல், சுஷாந்த் மராதே, ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஷ் கோபால், ஜலாஜ் சக்சேனா.

Story first published: Saturday, April 19, 2014, 12:36 [IST]
Other articles published on Apr 19, 2014
English summary
A confident Royal Challengers Bangalore would look to carry on their winning momentum when they take on title holders Mumbai Indians, who would be low on belief after the opening thrashing in the Indian Premier League, here on Satuday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X