For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல்: "பழைய பன்னீர்செல்வமாக' பந்தாடிய யுவராஜ்- டெல்லியை சூறையாடிய பெங்களூர் அணி!!

By Mathi

ஷார்ஜா: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சொதப்பி ஏகவெறுப்புக்குள்ளான யுவராஜ்சிங் அற்புதமாக ஆடி பெங்களூர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஷார்ஜாவில் நேற்றிரவு மோதின. டெல்லி கேப்டன் பீட்டர்சன் காயம் காரணமாக நேற்று ஆடவில்லை. இதனால் தினேஷ் கார்த்திக் அந்த அணிக்கு தலைமை தாங்கினார்.

அதேபோல் பெங்களூர் அணியின் 'புயல்' கிறிஸ் கெய்ல் நேற்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு முதுகுவலி பிரச்சினை இருப்பதால் பங்கேற்கவில்லை.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மயங்க் அகர்வாலும், முரளிவிஜயும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

3வது ஓவரில் அவுட்

3வது ஓவரில் அவுட்

பெங்களூர் அணியின் அதிரடியாக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் தொடக்கத்தில் திணறினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் முரளி விஜய் சிக்சர் அடிக்க, அதே ஓவரில் மயங்க் அகர்வால் ஆட்டம் இழந்தார். அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

டக் அவுட் ஆன தினேஷ்

டக் அவுட் ஆன தினேஷ்

2-வது விக்கெட்டுக்கு இறங்கியவர் தினேஷ் கார்த்திக். ஐபிஎல் ஏலத்தில் ரூ12 கோடிக்கு எடுக்கப்பட்டவர். ஆனால் தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்தடுத்து அவுட்- தடுமாற்றம்

அடுத்தடுத்து அவுட்- தடுமாற்றம்

களத்தில் இருந்த முரளிவிஜயுடன் மனோஜ் திவாரி இணைந்தார். ஆனால் மனோஜ் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். முரளி விஜய்யும் 20 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். இதனால் 7.1 ஓவரில் 35 ரன்களே எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

மானங்காத்த டுமினி -ராஸ் டெய்லர்

மானங்காத்த டுமினி -ராஸ் டெய்லர்

பின்னர் களமிறங்கிய டுமினி- ராஸ் டெய்லர் ஜோடி 12வது ஓவர் ரொம்பவே நிதானம் காட்டி நிலைக்கப் போராடினர். பின்னர் டுமினி சுழன்றடிக்க ஆரம்பிக்க டெல்லி அணியின் ஸ்கோர் சற்றே ஏறத் தொடங்கியது.

ஒரு தென்றல் புயலானதே..

ஒரு தென்றல் புயலானதே..

கடைசி 3 ஓவரில் டுமினி -டெய்லர் ஜோடி பந்துகளை வெளுத்து வாங்கினர். திண்டாவின் 18-வது ஓவரில் 17 ரன்களும், ஸ்டார்க்கின் 19-வது ஓவரில் 13 ரன்களும், திண்டாவின் 20-வது ஓவரில் 14 ரன்களும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கிடைத்தன.

145 ரன்கள்..

145 ரன்கள்..

20 ஓவர் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது.

டுமினி 67 ரன்

டுமினி 67 ரன்

டுமினி 48 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். ராஸ் டெய்லர் 39 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.

ஆயிரம் ரன்களைக் கடந்த டுமினி- டெய்லர்

ஆயிரம் ரன்களைக் கடந்த டுமினி- டெய்லர்

முன்னதாக டுமினியும், டெய்லரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்தனர். இதுவரை 3 அணிக்காக ஆடியுள்ள டுமினி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 1,045 ரன்களும் 5 அணிக்காக ஆடிய சிறப்புடைய டெய்லர் 1,001 ரன்களும் குவித்துள்ளனர்.

41 பேர் ஆயிரம் ரன்களைக் கடந்தனர்..

41 பேர் ஆயிரம் ரன்களைக் கடந்தனர்..

ஐ.பி.எல். போட்டிகளில் இந்த இருவரையும் சேர்த்து 41 வீரர்கள் ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

பின்னர் 146 ரன்கள் இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான அறிமுக வீரர் நிக் மேடின்சன் 4 ரன்களில் அவுட் ஆனார். பார்த்தீவ் பட்டேல் 37 ரன்களில் வெளியேறினர்.

கலக்கிய கோஹ்லி- யுவி ஜோடி

கலக்கிய கோஹ்லி- யுவி ஜோடி

இதன் பின்னர் கேப்டன் விராத் கோஹ்லியும் யுவராஜ்சிங்கும் செம ஆட்டத்தைக் காண்பித்தனர்.

பழைய பன்னீர்செல்வமாக வந்த யுவி

பழைய பன்னீர்செல்வமாக வந்த யுவி

20 ஓவர் உலகக் கோப்பையில் ரசிகர்களின் ஏக வெறுப்புக்கு ஆளான யுவராஜ்சிங், டெல்லி அணியின் ராகுல் ஷர்மா, முகமது ஷமி, நீஷம் ஓவர்களில சிக்சர்களை பறக்க விட்டு "பழைய பன்னீர்செல்வமாக" தன்னை மீட்டுக் காண்பித்தார்.

விடா கண்டன் விராத் கோஹ்லி

விடா கண்டன் விராத் கோஹ்லி

மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு முறை அவுட்டில் இருந்து தப்பிய விராத் கோஹ்லியும் விடுவதாக இல்லாமல் வெளுத்து கட்டினார்.

8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

யுவி 62 ரன்கள்

யுவி 62 ரன்கள்

யுவராஜ்சிங் 29 பந்துகளை எதிர்கொண்டு 52 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 5 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் விராத் கோஹ்லி 38 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார். இதில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

Story first published: Friday, April 18, 2014, 9:31 [IST]
Other articles published on Apr 18, 2014
English summary
Yuvraj Singh struck form with a brilliant unbeaten half century as Royal Challengers Bangalore crushed Delhi Daredevils by eight wickets in their IPL campaign opener.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X