For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐபிஎல்: தென்னாப்பிரிக்காவில் சில போட்டிகள்?

By Mathi
IPL matches to be moved out of India?
டெல்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக 7வது ஐபிஎல் போட்டிகள் சிலவற்றை தென்னாப்பிரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.

7வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அதே கால கட்டத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது கடினமானதாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறி வருகிறது.

ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டிருந்தன. அதனால் இம்முறையும் தென்னாப்பிரிக்காவில் சில போட்டிகளை நடத்தலாமா என்பது குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல் தலைவர் பிஸ்வால் ஆகியோர் உள்துறை அமைச்சர் ஆகியோர் நேற்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்துப் பேசினர். அப்போதும் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றே ஷிண்டே கூறியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்தே பாதி போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பல அணிகளின் தேர்வாக இருப்பது தென்னாப்பிரிக்காதான் என்றும் கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவில் பாதி போட்டிகளும் எஞ்சியவை தென்னாப்பிரிக்காவிலும் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

Story first published: Friday, February 21, 2014, 10:35 [IST]
Other articles published on Feb 21, 2014
English summary
The 2014 edition of the Indian Premier League is set to partly move out of India due to general elections and the matches will be played in South Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X