For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற டோணி முடிவு: இங்கிலாந்து தொடருடன் குட்பை சொல்கிறார்?

By Veera Kumar

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் என்று பெயர் எடுத்துள்ள டோணி, டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் விளையாட்டு ஆகிய 3 வகை போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

கோப்பைகளை குவித்தவர்

கோப்பைகளை குவித்தவர்

2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011ம் ஆண்டு ஒருநாள் போட்டித்தொடருக்கான உலக கோப்பையையும் பெற்றுக்கொடுத்தார். இவரது தலைமையில் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தையும் பெற்று அசத்தியது.

லார்ட்சில் வரலாறு

லார்ட்சில் வரலாறு

அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடி தந்தார். 28 ஆண்டுக்கு பிறகு அவரது தலைமையிலான அணி லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றது.

வயது காரணமாக ஓய்வு?

வயது காரணமாக ஓய்வு?

இதற்கிடையே 2015ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டும், 33 வயதாவதாலும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக டோணி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றியுடன் விடை பெறுகிறார்

வெற்றியுடன் விடை பெறுகிறார்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடித்து வைத்த பிறகு அவர் டெஸ்டில் இருந்து விலகும் முடிவை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பலும், டோணி விலகி, அந்த பதவியை கோஹ்லிக்கு விட்டுக்கொடுப்பது நல்லது என்று கூறியிருந்தார்.

பலவீனமான பேட்டிங்

பலவீனமான பேட்டிங்

டோணி சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சரிவர பேட்டிங் செய்யவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பழைய அளவுக்கு அதிரடியை காண்பிக்கவில்லை என்றாலும் இன்னமும் ஆபத்பாண்டவராகவே காட்சியளிக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக அளவு உடல் உழைப்பு தேவைப்படுவதால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த டோணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, July 25, 2014, 11:39 [IST]
Other articles published on Jul 25, 2014
English summary
Amid the euphoria of India's elusive win at Lord's in the second Test against England, a statement from skipper MS Dhoni got lost under a stockpile of statistics and Ishant Sharma carols.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X