For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியிடம் பம்மிப் பதுங்கிய கிங்ஸ்...!

ராஞ்சி: விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று விளையாடிய விதம் ரசிகர்களை வெறுப்படைய வைத்து விட்டது. பம்மிப் பதுங்கி ஆடி பெங்களூரிடம் தோற்றுப் போய் விட்டது சென்னை.

இத்தனைக்கும் டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில்தான் போட்டி நடந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடியும் கூட சென்னை தோற்றது டோணியின் ரசிகர்களையும் கூட ஏமாற்றத்தில் தள்ளி விட்டது.

இதற்கிடையே இந்த வெற்றிக்காக தனது வீரர்களைப் பாராட்டியுள்ளார் கோஹ்லி.

5 விக்கெட் வித்தியாசத்தில்

5 விக்கெட் வித்தியாசத்தில்

இப்போட்டியில் பெங்களூர் அணி சென்னையை வெறும் 138 ரன்களில் சுருட்டி பின்னர் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை தொட்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கிரேட்...

கிரேட்...

இந்த வெற்றி குறித்து கோஹ்லி கூறுகையில், இது கிரேட் வெற்றி. எங்களது வீரர்கள் தங்களது திறமையைக் காட்டி விட்டனர். கெய்ல் அபாரமாக ஆடினார். ஆப் டிவில்லியர்ஸ் ஆட்டம் சிறப்பு. யுவராஜ் வழக்கம் போல அசத்தினார். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக ஆடினோம்.

நான் எதுவுமே சொல்லலை

நான் எதுவுமே சொல்லலை

எனது அணியினரிடம் எப்படி ஆட வேண்டும் என்று நான் எதுவுமே சொல்லவில்லை. யுவராஜ் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது என்றார்.

டோணி சொல்வது என்ன...

டோணி சொல்வது என்ன...

சென்னை கேப்டன் டோணி கூறுகையில், பத்து ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதுதான் பாதகமாகி விட்டது. நன்றாகத்தான் பந்து வீசினோம். குறிப்பாக கடைசி நான்கு ஓவர்களில் பந்து வீச்சு சிறப்பாகே இருந்தது. ஆனால் 10 ரன்கள் குறைத்து எடுத்ததால் சிக்கலாகி விட்டது.

ஹோமாக இருந்தால் என்ன...

ஹோமாக இருந்தால் என்ன...

உள்ளூரில் விளையாடுவதாக இருந்தாலும் கூட நன்றாக விளையாடும் அணியே வெல்லும். எனவே பெங்களூர் சிறப்பாக ஆடியதால் அது வென்றது என்றார் டோணி.

சரித்தான்...!

Story first published: Monday, May 19, 2014, 14:28 [IST]
Other articles published on May 19, 2014
English summary
Royal Challengers Bangalore captain Virat Kohli praised his players for showing character in their five-wicket win over formidable Chennai Super Kings in an IPL match in Ranchi yesterday. "Great win for us, especially after the wicket played in the second innings. Today (Sunday) was a great example of the character in the side. You have (Chris) Gayle hitting out there, then AB (de Villiers) and Yuvi in such for, you back your team," Kohli said after his side's victory which kept them in the hunt for a play-off berth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X