For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகாவுக்கு ரூ.20 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

By Mathi

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Jayalalithaa congratulates Dipika Pallikal

இதனையடுத்து அவரை பாராட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Jayalalithaa congratulates Dipika Pallikal

ஆசியப் போட்டிகளில் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2011-ல் அறிவித்தது. அதன்படி, தமிழக அரசு தங்களை பாராட்டி ரூ.20 லட்சம் ரொக்கப்பரிசை வழங்குகிறது.

இனிவருங் காலங்களில் இந்தியாவுக்காக மேன்மேலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Story first published: Monday, September 22, 2014, 16:13 [IST]
Other articles published on Sep 22, 2014
English summary
Lauding the performance of Dipika Pallikal who won the squash single bronze at the Asian Games, Tamil Nadu Chief Minister Jayalalithaa today announced a cash award of Rs.20 lakh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X