For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பைப் போட்டியின்போது எங்கு போயிருந்தார் இந்த கரீம் பெல்லராபி...?

பெர்லின்: பேயர் லெவர்குசன் என்ற கால்பந்து அணியின் வீரர் கரீம் பெல்லராபி ஆட்டம் ஒன்றில் போட்டி தொடங்கிய 9வது விநாடியில் கோலடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஜெர்மனி லீக் போட்டியில்தான் இந்த சாதனையைப் படைத்தார் பெல்லராபி. பேயர் அணியும், போரஸ்ஸியா டோர்ட்மன்ட் அணியும் சனிக்கிழமை நடந்த போட்டியில் மோதின. இதில் பேயர் அணி வீரர் கரீம் ஆட்டம் தொடங்கிய 9வது விநாடியில் தனக்கு திடீரென கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்து விட்டார்.

Karim Bellarabi Makes Bundesliga History With Nine-Second Goal

ஜெர்மனி லீக் வரலாற்றில் அதி வேகமாக போடப்பட்ட கோலாக இது மாறியது. இதற்கு முன்பு 1998ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நடந்த போட்டியில் ஹம்பர்க் அணிக்கு எதிராக பேயர்ன் முனிச் அணிக்காக ஆடிய பிரேசில் வீரர் ஜியோவன்னி எல்பர் 11வது விநாடியில் போட்ட கோல்தான் சாதனையாக இருந்து வந்தது.

இந்தக் கோல் முயற்சியின்போது மொத்தம் பாஸ்களையே பெல்லராபி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் கோலை எதிர்பார்க்காமல் ஸ்டேடியே ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போனது. டோர்ட்மன்ட் பயிற்சியாளர் ஜர்ஜின் கிளாப் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் டிவி ஸ்கீரினையே பார்த்துக் கொண்டிருந்தார்.

Story first published: Sunday, August 24, 2014, 12:49 [IST]
Other articles published on Aug 24, 2014
English summary
Bayer Leverkusen's Karim Bellarabi entered the Bundesliga record books on Saturday when scoring the fastest ever German league goal after a mere nine seconds. The midfielder's lighning strike against Borussia Dortmund was two seconds quicker than the previous record held by Bayern Munich's Giovanni Elber. The Brazilian produced his magic in the 11th second against Hamburg on January 31, 1998.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X