For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டங்கன்தான் எங்களுக்கு 'பாஸ்', சாஸ்திரி வெறும் 'மேஸ்திரி'தான்.. டோணி அதிரடி!

டெல்லி: ஊரே டங்கன் பிளட்சருக்கு எதிராக கொடி பிடித்து நிற்கும்போது, கேப்டன் டோணி மட்டும் அவருக்கு முழு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டித் தொடரை டங்கன் தலைமையில் சந்திப்போம் என்று அவர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டங்கனை டம்மியாக்கும் வகையில் ரவி சாஸ்திரியை இயக்குநராக்கியுள்ளது கிரிக்கெட் வாரியம். இனி டங்கன் எதைச் செய்தாலும் அதை சாஸ்திரியிடம் கேட்டே செய்ய வேண்டிய நிலை. மேலும் டங்கனுக்குத் துணையாக என்று கூறி இரண்டு உதவிப் பயிற்சியாளர்களையும் நியமித்துள்ளது. இதன் மூலம் டங்கன் மேலும் டம்மியாகியுள்ளார்.

இதுபோதாதென்று டங்கனின் சேவை இனி தேவை இல்லை, அவரே புரிந்து கொண்டு விலகினால் வரவேற்போம் என்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவரும் கூறியுள்ளார். எனவே இங்கிலாந்து தொடரோடு டங்கன் விடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

டங்கன் மீது முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் கடும் ஆட்சேபத்தில் உள்ளனர். இந்த நிலையில் டோணி, டங்கனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

டங்கன்தான் பாஸ்...

டங்கன்தான் பாஸ்...

இதுகுறித்து டோணி கூறுகையில், 2015 உலகக் கோப்பைப் போட்டி வரை டங்கன்தான் பாஸ். அவர் தொடர்ந்து பணியாற்றுவார். இந்திய அணியின் பயிற்சியாளராக அவர்தான் தொடருகிறார்.

ரவி சாஸ்திரி வந்தாலும் கூட...

ரவி சாஸ்திரி வந்தாலும் கூட...

ரவி சாஸ்திரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் டங்கன்தான் எங்களுக்குப் பாஸ். அவரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துப் பிரச்சினை இல்லை. மற்றவர்கள் வெளியில் என்ன பேசுகிறார்கள் எனபது குறித்தும் நான் கவலைப்படவில்லை. இப்போதைக்கு எங்களது அணியின் பாஸ் டங்கன்தான்.

புதிதாக வருகிறார்கள்

புதிதாக வருகிறார்கள்

சில நியமனங்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. சில ஆதரவு ஊழியர்கள் புதிதாக வந்துள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக எங்களது செயல்பாடுகள் வழக்கம் போலவே இருக்கும்.

மேஸ்திரி வேலைக்குத்தான் சாஸ்திரி

மேஸ்திரி வேலைக்குத்தான் சாஸ்திரி

அணியை வெளியிலிருந்து நிர்வகிக்கும் பொறுப்பை ரவி சாஸ்திரி பார்ப்பார். அவர் என்ன உணருகிறார் என்பதை எங்களுக்குத் தெரிவிப்பார். அவர் வந்திருப்பது நல்லதுதான். பெருமைக்குரிய இந்திய வீரர் அவர். அதேசமயம், பாசிட்டிவான நபரும் கூட. போராடுவதில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். சரியான கோணத்தில் செயல்படுவார்.

டிரெவர் - ஜோ இல்லாதது கஷ்டம்தான்

டிரெவர் - ஜோ இல்லாதது கஷ்டம்தான்

டிரெவர் பென்னி, ஜோ டேவஸ் ஆகியோர் இல்லாதது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. குறிப்பாக பீல்டர்கள் கேட்ச்சுகளை கோட்டை விடும்போது பீல்டிங் கோச் குறித்து நாங்கள் நிச்சயமாக பீல் பண்ணுவோம். இருப்பினும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்வோம்.

திருப்பி அடிப்போம்

திருப்பி அடிப்போம்

தற்போது செய்துள்ள இந்தப் புதிய மாற்றங்கள் மூலம் ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, டெஸ்ட் தொடரின் தோல்வியை மறக்க முயற்சிப்போம் என்றார் டோணி.

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

டெஸ்ட் தொடர் இழப்புக்குப் பின்னர் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல முன்னாள் ஆல் ரவுண்டர் சஞ்சய் பாங்கர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரத் அருண் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர். ஸ்ரீதர், பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 25, 2014, 12:02 [IST]
Other articles published on Aug 25, 2014
English summary
Ending speculation about coach Duncan Fletcher's role in the five one-dayers against England, Indian skipper Mahendra Singh Dhoni on Sunday said that the Zimbabwean will stay as "boss" of the team until the 2015 World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X