For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியே தொடரட்டும், பேசாம விட்ருங்க.. கவாஸ்கர்!

டெல்லி: இந்திய அணியின் கேப்டனாக டோணியே தொடர வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

நல்ல தலைமைத்துவத்தின் உதாரணமாக டோணி திகழ்வதால் அவரை மாற்றத் தேவையில்லை என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கு டோணியைக் குறை சொல்லக் கூடாது என்றும், அது தவறு என்றும் கூறியுள்ளார் கவாஸ்கர்.

நல்ல லீடர்

நல்ல லீடர்

இதுகுறித்துக் கவாஸ்கர் கூறுகையில், அணியை சீரிய முறையில்தான் வழி நடத்தி வருகிரார் டோணி. கடினமான சூழல்களில் அவர் பொறுப்புடன் ஆடியுள்ளார். முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அவர் என்ன செய்வார் பாவம்

அவர் என்ன செய்வார் பாவம்

அவரைப் பின்பற்றி அணியினர் ஆடாவிட்டால், செயல்படாவிட்டால், டோணியைக் குறை சொல்லி என்ன பயன் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.

டோணிக்கு மாற்று இல்லை

டோணிக்கு மாற்று இல்லை

இப்போதைக்கு டோணிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை. எனவே அவர் கேப்டனாக தொடர வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்றார் கவாஸ்கர்.

சாஸ்திரிக்கும் வாழ்த்து

சாஸ்திரிக்கும் வாழ்த்து

ஏற்கனவே இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரிக்கும், மற்ற புதியவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள கவாஸ்கர், இவர்களால் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றும், போகப் போகத்தான் மாற்றங்களைக் காண முடியும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 20, 2014, 12:47 [IST]
Other articles published on Aug 20, 2014
English summary
India's cricket legend Sunil Gavaskar Tuesday (August 19) backed beleaguered captain Mahendra Singh Dhoni for leading with example and also hailed the appointment of his former team mate Ravi Shastri as the team director for the ODI series against England starting Aug 25.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X