For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, மலிங்கா!

அபுதாபி: மலிங்கா மானஸ்தன்.. மும்பை இந்தியன்ஸ் அணி தோற்க தான்தான் காரணம் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

4 விக்கெட் வீழ்த்தினாலும் கூட அதை ரொம்ப லேட்டாக வீ்ழ்த்தியதால் மும்பை அணியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸை முடக்கிப் போட முடியாமல் போய் விட்டது. இதனால் அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட நேரிட்டு விட்டது.

மேலும் மலிங்கா ஒரு முக்கியமான அருமையான கேட்ச்சையும் மிஸ் செய்ததால் கொல்கத்தாவுக்கு ரொம்ப வசதியாகப் போய் விட்டது. இந்த நிலையில் தன்னால்தான் மும்பை இந்தியன்ஸ் தோற்றதாக ஒப்புக் கொண்டுள்ளார் மலிங்கா.

மலிங்காவின் பேட்டியிலிருந்து சில....

10 ஓவர் நன்றாக பந்து வீசினோம்

10 ஓவர் நன்றாக பந்து வீசினோம்

முதல் பத்து ஓவர்களில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர்கள் தலையெடுத்து விட்டனர்.

காலிஸையும், பாண்டேவையும் விட்டதுதான் தப்பு

காலிஸையும், பாண்டேவையும் விட்டதுதான் தப்பு

காலிஸ் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி விட்டனர். அதைத் தடுக்கத் தவறி விட்டோம்.

அபாரமான ஆட்டம்

அபாரமான ஆட்டம்

இருவருமே சிறப்பாக ஆடினார்கள். சில ஓவர்களில் அவர்கள் அடித்து ஆடியது மிரட்சியைக் கொடுத்தது.

காலிஸ் கேட்ச்தான் முக்கியக் காரணம்

காலிஸ் கேட்ச்தான் முக்கியக் காரணம்

காலிஸ் 34 ரன்களில் இருந்தபோது என்னிடம் அவர் கேட்ச் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான் அதைத் தவற விட்டு விட்டேன். அதுதான் எங்களது தோல்விக்கு முக்கியக் காரணம். அதற்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன்.

எனது பந்து வீச்சில் திருப்தியே

எனது பந்து வீச்சில் திருப்தியே

எனது பந்து வீச்சில் எனக்குத் திருப்தி உள்ளது. நன்றாகவே பந்து வீசினோம். ஒரு அணியாகத்தான் நாங்கள் தோற்று விட்டோம். அது ஏமாற்றம் தருகிறது.

முதல் போட்டிதானே

முதல் போட்டிதானே

ஆனால் இது முதல் போட்டிதான். எனவே யாரும் சோர்வடைய வேண்டாம். இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. இதைப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். தவறுகளைத் திருத்தி அடுத்தடுத்த போட்டிகளில் பிரமாதமாக ஆட வேண்டும் என்றார் மலிங்கா.

Story first published: Thursday, April 17, 2014, 12:39 [IST]
Other articles published on Apr 17, 2014
English summary
He shone with the ball with a four-wicket haul but Mumbai Indians' pacer Lasith Malinga feels responsible for the team's IPL loss to Kolkata Knight Riders, saying that a dropped catch by him cost the defending champions dearly. Highlights Mumbai lost by 41 runs in the IPL opener last night after Manish Pandey and Jacques Kallis' 50s helped KKR post a fine total of 163 on the board.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X