For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

2வது அரையிறுதி: நெதர்லாந்து- அர்ஜென்டினா இன்று மோதல்! மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்சி?

By Veera Kumar

சா பவுலோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரின், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் இன்று மோத உள்ளன. சா பாவ்லோ நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

இன்றைய அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் ஆவலுடன் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவும், 3 முறை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய நெதர்லாந்தும் உள்ளன. இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

நெதர்லாந்து கேப்டன் அவுட்

நெதர்லாந்து கேப்டன் அவுட்

வயிற்று வலி காரணமாக, நெதர்லாந்து அணியின் கேப்டன் வேன் பெர்சி பயிற்சியில் பங்கேற்கவில்லை. நடப்பு உலகக் கோப்பையில் 3 கோல்கள் அடித்துள்ள பெர்சி, இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

அர்ஜென்டினா பின்னடைவு

அர்ஜென்டினா பின்னடைவு

நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள், இதுவரை நேருக்கு நேர் விளையாடியுள்ள 8 போட்டிகளில் , நான்கில் நெதர்லாந்து வெற்றி கண்டுள்ளது. அர்ஜென்டினா அணி ஒரு ஆட்டத்தில், அதுவும் 1978 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிரா ஆகின.

24 வருஷத்துக்கு பிறகு..

24 வருஷத்துக்கு பிறகு..

அர்ஜென்டினா 5வது முறையாக அரை இறுதிக்கு நுழைந்து உள்ளது. அதிலும், 24 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அரையிறுதிக்குள் வந்துள்ளது. நெதர்லாந்து அணி தொடர்ந்து 2வது முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை வந்து ஸ்பெயினிடம் தோற்றது. ஒட்டுமொத்தமாக 5வது தடவையாக அரைஇறுதிக்குள் வந்து உள்ளது.

தோல்வியை காணாத அணிகள்

தோல்வியை காணாத அணிகள்

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே நடப்பு போட்டித்தொடரில், தோல்வி எதையும் சந்திக்காமல் அரை இறுதிக்கு நுழைந்துள்ளன. இதனால் இறுதிப்போட்டியில் நுழைய அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் கடுமையாக போராடும்.

மெஸ்சி மேஜிக்

மெஸ்சி மேஜிக்

24 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அரை இறுதிக்கு தகுதி பெற்றதற்கு கேப்டன் லியோனல் மெஸ்சியின் சிறப்பான ஆட்டம் முக்கிய காரணம். மெஸ்சி இதுவரை 4 கோல் அடித்துள்ளார். மெஸ்சியை மட்டுமே நம்பியுள்ள அர்ஜென்டினா, அவரது மேஜிக் நிகழ்ந்தால்தான் பைனலுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்திலுள்ளது. அந்த அணியின் மற்றொரு முன்னணி வீரர் டிமரியா காயத்தால் ஆடாதது அணிக்கு பாதிப்பாகும்.

Story first published: Wednesday, July 9, 2014, 18:07 [IST]
Other articles published on Jul 9, 2014
English summary
Argentina go into semifinal clash against Netherlands with the biggest weapon in world football in their armoury. Lionel Messi is the real weapon of mass destruction, the biggest threat to any team in the game.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X