For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ச்சே... இந்தியக் கனவில் மண் அள்ளிப் போட்ட மெக்கல்லம் - 2வது டெஸ்ட் டிரா

வெல்லிங்டன்: நியூசிலாந்துடனான இந்தியாவிந் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து விட்டது. இதனால் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்று விட்டது.

2வது போட்டி இந்தியாவுக்கு சாதகமாக இருந்த போட்டியாகும். இந்தியா இதில் அழகாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் கேப்டன் மெக்கல்லமும், வால்டிங்கும் சேர்ந்து இந்தியாவின் கனவை காலி செய்து விட்டனர்.

குறிப்பாக மெக்கல்லம் போட்டியை அப்படியே தலைகீழா்க மாற்றி விட்டார். அபாரமாக ஆடிய அவர் முச்சதம் போட்டு புதிய வரலாறும் படைத்து விட்டார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் போய் விட்டது.. செய்வதறியாமல் இந்திய வீரர்கள் திகைத்து நின்றதே நமக்கு மிச்சம்.

மெக்கல்லம் 302

மெக்கல்லம் 302

நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் மிக மிக அபாரமாக ஆடி அசத்தி விட்டார். மகா பொறுமையாகவும், தோல்வி அடைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடனும் ஆடிய அவர் 302 ரன்களைக் குவித்து விட்டார். கூடவே வால்டிங்கும் தன் பங்குக்கு 124 ரன்களைக் குவித்தார்.

புதுமுக வீரரின் முதல் சதம்

புதுமுக வீரரின் முதல் சதம்

அதேபோல புதுமுக வீரர் ஜேம்ஸ் நீஷம் 137 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால் நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 680 ரன்களைக் குவித்து விட்டது.

சுத்தமாக பறிபோன சான்ஸ்

சுத்தமாக பறிபோன சான்ஸ்

இதையடுத்து 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற கஷ்டமான இலக்கு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் கடைசி நாளில், அதுவும் சில மணி நேரங்களில் இதை எப்படி எடுப்பது.. எனவே இந்தியாவிடமிருந்து வெ்ற்றி வாய்ப்பு முற்றிலும் நழுவிப் போய் விட்டது.

3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தபோது

3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தபோது

இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்திருந்தபோது இரு அணி கேப்டன்களும் போட்டியை டிரா செய்ய முடிவெடுத்தனர்.

விராத் கோஹ்லி 105

விராத் கோஹ்லி 105

இரண்டாவது இன்னிங்ஸில் விராத் கோஹ்லி 105 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருக்கு 6வது டெஸ்ட் சதமாகும். ரோஹித் சர்மா 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஒரு வெற்றி கூட இல்லை

ஒரு வெற்றி கூட இல்லை

நியூசிலாந்து தொடர் மொத்தத்தில் இந்தியாவுக்கு மோசமான டூராக அமைந்து விட்டது. ஒரு வெற்றியைக் கூட இந்தத் தொடரில் இந்தியா பார்க்கவி்ல்லை. ஒரு நாள் போட்டியிலும் எதிலும் வெல்லவில்லை. டெஸ்ட்டிலும் வெல்லவில்லை.

Story first published: Tuesday, February 18, 2014, 10:49 [IST]
Other articles published on Feb 18, 2014
English summary
India ended the ignominious tour of New Zealand by drawing the second and final Test after home team skipper Brendon McCullum became the first Kiwi batsman to hit a triple-century and stage an incredible turnaround to clinch the the two-match series 1-0, here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X