For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நார்தன் அணியை 86 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

By Veera Kumar

ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த நார்தன் டிஸ்ட்ரிக்சை வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்.

ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 9வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹோபர்ட் ஹரிகேன்சும், நியூசிலாந்தின் நார்தன் டிஸ்ட்ரிக்சும் சந்தித்தன.

டாசில் வெற்றி பெற்ற நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஹோபர்ட் அணியின் ரன்வேகம் முதல்பாதியில் சற்று சுமாராகவே நகர்ந்தது. 9 ஒவர்களில் தான் 50 ரன்களை தொட்டது. பென் டங் 12 ரன்னிலும், கேப்டன் டிம் பெய்ன் 43 ரன்களிலும் (34 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

இதன் பின்னர் சோயிப் மாலிக்கும், எய்டன் பிளிஸ்சாட்டும் ஜோடி சேர்ந்து, நார்தன் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் ரன்ரேட் விகிதம் மளமளவென உயர்ந்தது. டிரென்ட் பவுல்ட்டின் ஒரே ஓவரில் இந்த ஜோடி 5 பவுண்டரிகளை ஓட விட்டது. 3வது விக்கெட்டுக்கு இவர்கள் 100 ரன் திரட்டிய நிலையில் கடைசி ஓவரில் பிரிந்தனர். பிளிஸ்சாட் 62 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹோபர்ட் அணி 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 45 ரன்களுடன் (22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஹோபர்ட் அணி 76 ரன்களை சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

Northern Knights given Champions League T20 reality check

பின்னர் 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நார்தன் அணி ஹோபர்ட்டின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்டது. கனே வில்லியம்சன் (3 ரன்), கேப்டன் பிளைன் (0), வாட்லிங் (9 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற, நார்தன் அணியால் இலக்கை நெருங்க கூட முடியவில்லை. 16.4 ஓவர்களில் 92 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் அணி அபார வெற்றி பெற்றது. ஹோபர்ட் தரப்பில் ல்பனாஸ், போலிஞ்சர் தலா 3 விக்கெட்டுகளும், மென்னி, டோஹர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

3வது ஆட்டத்தில் விளையாடிய ஹோபர்ட் அணிக்கு இது 2வது வெற்றியாகும். 2வது ஆட்டத்தில் ஆடிய நார்தனுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Story first published: Wednesday, September 24, 2014, 12:44 [IST]
Other articles published on Sep 24, 2014
English summary
The Northern Knights' dream run in the Twenty20 Champions League in India has come to a grinding halt after they were thrashed by the Hobart Hurricanes on Tuseday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X