For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 'பிட்ச்'சுக்கெல்லாம் பயந்தவங்க நாங்க இல்லை... "டேரிங்" டோணி!

By Veera Kumar

லண்டன்: இங்கிலாந்து பிட்சை பார்த்து நாங்கள் பயப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டில் வேகப்பந்து மற்றும் எகிறி பந்துக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை தகர்த்தது டிரென்ட் பிரிட்ஜ் மைதானம். இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் செத்துப்போன அந்த ஆடுகளத்தில், பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. எனவே அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.

{ventuno}

'கிரிக்கெட்டின் மெக்கா' என்ற செல்லப் பெயர் கொண்ட லாட்சில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிருபர்களிடம் டோணி கூறுகையில்,

பிட்சை கட்டுப்படுத்த வீரர்களால் முடியாது. எனவே அதை எதிர்த்து ஆட நாங்கள் தயாராக உள்ளோம். இங்கிலாந்து ஆடுகளங்களை பார்த்து எங்களுக்கு பயம் கிடையாது. முதல் டெஸ்ட் போட்டியில், பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த மாதிரி பிட்சிலும் 25 முதல் 30 ஓவர்கள் வீசினார்கள்" என்றார்.

Story first published: Tuesday, July 15, 2014, 17:48 [IST]
Other articles published on Jul 15, 2014
English summary
We are not afraid of England pitches says Indian captain Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X