For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினைத் தெரியாது.. ஷரபோவா சொன்னதில் என்ன தப்பு... வக்காலத்து வாங்கும் ஜுவாலா....!

கொல்கத்தா: சச்சினைத் தெரியாது என்று மரியா ஷரபோவா சொன்னதில் என்ன தவறு உள்ளது. கிரிக்கெட் 12 நாடுகளில்தான் ஆடுகிறார்கள். ஆனால் டென்னிஸ் விளையாட்டு 200 நாடுகளில் ஆடப்படுகிறது. எனவே ஷரபோவா எனக்கு சச்சினைத் தெரியாது என்று சொன்னதில் தப்பே இல்லை என்று கூறியுள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா.

சர்ச்சைகள் பலவற்றில் சிக்கியவர் ஜூவாலா. இப்போது அவரிடம் ஒரு சரச்சை குறித்து கேட்கப்பட்டபோது இப்படிப் பதிலளித்தார் ஜூவாலா.

கொல்கத்தாவுக்கு வந்திருந்த ஜூவாலாவிடம், சச்சினைப் போய்த் தெரியாது என்று கூறி விட்டாரே ஷரபோவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது நீண்டதொரு பதிலைக் கொடுத்தார் கட்டா.

12 நாடுகளில்தான் கிரிக்கெட்

12 நாடுகளில்தான் கிரிக்கெட்

கிரிக்கெட்டை 12 நாடுகளில்தான் விளையாடுகிறார்கள். இந்த 12 நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பிரபலமாக உள்ளது.

ஆனால் டென்னிஸ் 200 நாடுகளில்

ஆனால் டென்னிஸ் 200 நாடுகளில்

ஆனால் டென்னிஸ் விளையாட்டு 200 நாடுகளில் விளையாடப்படுகிறது. இங்கு டென்னிஸ்தான் பிரபலம். கிரிக்கெட் அல்ல.

பேட்மிண்டனுக்கு 150 நாடுகள்

பேட்மிண்டனுக்கு 150 நாடுகள்

அதேபோல பேட்மிண்டன் விளையாட்டை உலக அளவில் 150 நாடுகளில் ஆடுகிறார்கள். இங்கு பேட்மிண்டன் பிரபலம். இதுதான் உண்மை. இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அமெரிக்காவில் ஒரு பயலுக்கும் தெரியாதே....

அமெரிக்காவில் ஒரு பயலுக்கும் தெரியாதே....

அமெரிக்காவில் போய் கிரிக்கெட் பற்றிக் கேட்டால் ஒருவருக்கும் தெரியாது. அங்கு கிரிக்கெட் பற்றி யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா என்றுதான் கேட்பார்கள்.

ஷரபோவாவை எப்படிக் குறை கூறலாம்

ஷரபோவாவை எப்படிக் குறை கூறலாம்

டென்னிஸ் பற்றி மட்டுமே அறிந்த மரியா ஷரபோவாவிடம் போய் கிரிக்கெட் குறித்தும் சச்சின் குறித்தும் கேட்டால் அவர் எப்படி பதிலளிப்பார். எனவே அவரைக் குறை கூறுவதில் அர்த்தமே இல்லை. ஏன் இதை சர்ச்சையாக்குகிறார்கள் என்பதும் எனக்கு தெரியவில்லை.

முட்டாத்தனமாவுல்ல இருக்கு...

முட்டாத்தனமாவுல்ல இருக்கு...

இந்த சர்ச்சை உண்மையிலேயே முட்டாள்தனமானது. அவருக்கு டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்குத் தெரிந்தால்தானே தெரியும் என்பார்.

எனக்கு மெஸ்ஸிதான்....

எனக்கு மெஸ்ஸிதான்....

என்னிடம் கால்பந்து பற்றிக் கேட்டால்,. எனக்கு மெஸ்ஸியையும், அர்ஜென்டைனாவையும் மட்டுமே தெரியும். மெஸ்ஸிதான் எனக்குப் பிடித்த வீரர். அதற்கு மேல் எதுவுமே எனக்குத் தெரியாது. அதற்கு மேல் தெரியும் என்றால் மாரடோனா மட்டுமே. அவர் எனக்கு மிக மிக பிடித்த வீரர். இதையெல்லாம் போய் பிரச்சினையாக்கக் கூடாது என்றார் ஜூவாலா...!

பாவம், ஜூவாலாவை ஏமாத்திப்புட்டாரே மெஸ்ஸி... !

Story first published: Monday, July 14, 2014, 13:07 [IST]
Other articles published on Jul 14, 2014
English summary
Indian badminton star Jwala Gutta has said that there is nothing wrong in Sharapova's comment on Sachin.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X