For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

31 வருஷத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அமுக்கிய ஜிம்பாப்வே!

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். இருக்காதே பின்னே... 31 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டி ஒன்றில் அவர்கள் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளனரே.. அந்த உற்சாகம்தான்!

ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசரடித்துள்ளது.

அந்த அணியின் எல்டன் சிகும்பரா அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார்.

ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே.

31 வருடங்களுக்குப் பிறகு

31 வருடங்களுக்குப் பிறகு

ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே 31 வருடங்களுக்குப் பிறகு தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 1983ம் ஆண்டு

கடைசியாக 1983ம் ஆண்டு

கடைசியாக 1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது ஜிம்பாப்வே. அந்தத் தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையைத் தட்டிச் சென்றது என்பது நினைவிருக்கலாம்.

சிகும்பரா அபாரம்

சிகும்பரா அபாரம்

சிகும்பரா 52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரும் பிராஸ்பர் உத்சயாவும் இணைந்து 55 ரன்களைக் குவித்தனர்.

2 ஓவர் மிச்சம் வைத்து

2 ஓவர் மிச்சம் வைத்து

முன்னதாக 210 என்ற வெற்றி இலக்கை ஜிம்பாப்வே துரத்தியது. கடைசி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில் ஜிம்பாப்வே 7 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றியை சுவைத்தது.

முதல் போட்டியில் முத்தாய்ப்பு

முதல் போட்டியில் முத்தாய்ப்பு

1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது டிரன்ட் பிரிட்ஜில் நடந்த போட்டியில் இரு அணிகளும் சந்தித்தன. அதுதான் அந்த அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியும் ஆகும். அதில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அதன் பின்னர் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததே இல்லை. இப்போதுதான் அது தனது 2வது வெற்றியை சந்தித்துள்ளது.

ஆஸி போட்ட தப்புக் கணக்கு

ஆஸி போட்ட தப்புக் கணக்கு

முன்னதாக ஜிம்பாப்வே அணியுடனான நேற்றைய போட்டியில் பல தப்புக் கணக்குகளைப் போட்டு விட்டது ஆஸ்திரேலியா. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணம். மிட்சல் ஜான்சனை அணியில் சேர்க்கவில்லை. ஆல் ரவுண்டர் ஸ்டீவ் ஸ்மித்தையும் சேர்க்காமல் விட்டு விட்டனர். மேலும் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் போட்டியின்போது மீண்டும் காயமடைந்தார். தற்போது அவர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகிறார்.

தென் ஆப்பிரிக்காவை வென்றால்தான்

தென் ஆப்பிரிக்காவை வென்றால்தான்

இந்தத் தோல்வி காரணமாக நாளை தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெறும் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றாக வேண்டும். அப்படி ஜெயித்தால்தான் அது சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.

Story first published: Monday, September 1, 2014, 12:58 [IST]
Other articles published on Sep 1, 2014
English summary
Elton Chigumbura hit an unbeaten half-century as Zimbabwe recorded a famous three-wicket victory over No. 1-ranked Australia in a one-day triangular series match in Harare on Sunday for only their second win over their opponents in 31 years. Chigumbura finished on 52 not out and shared an unbroken stand of 55 with Prosper Utseya as Zimbabwe chased down a target of 210 to win with two overs to spare.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X