For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் எது தெரியுமா? மனம் திறந்த சச்சின்

By Veera Kumar

மும்பை: சச்சின் கிரி்க்கெட் வாழ்க்கையை புரட்டிப்போட்டது பெர்த் மைதானத்தில் அடித்த சதம்தான் என்று அவரே மனம் திறந்து தெரிவித்தார். இதற்கான காரணத்தையும் அவர் பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையிலுள்ள பள்ளியொன்று ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார். அப்போது அவர் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவு கூர்ந்தார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்

1992ம் ஆண்டில், எனக்கு 19 வயதாக இருந்தபோது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு சென்ற இந்திய அணியில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அந்த நாட்டின் பெர்த் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டிருந்தன.

பதம் பார்க்கும் பெர்த் மைதானம்

பதம் பார்க்கும் பெர்த் மைதானம்

உலகிலேயே வேகப்பந்து வீச்சுக்கு மிக அதிகமாக ஒத்துழைக்க கூடியது பெர்த் மைதானம். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்து எகிறி நெஞ்சு அளவுக்கு வரும். பந்தை எறிந்து பிட்சில் அது விழுந்தபிறகு அதன் வேகம் மேலும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது பெர்த்.

சதம் அடித்தேன்

சதம் அடித்தேன்

எனவே பெர்த் மைதானத்தில் சாதித்தால் உலகின் எந்த ஒரு மைதானத்திலும் பேட்டிங் செய்வது எளிதாகிவிடும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே மிகவும் பொறுமையாக, கவனமாக ஆடினேன். அந்த போட்டியில் 114 ரன்களை எடுத்தேன்.

திருப்புமுனை

திருப்புமுனை

இந்த சதம்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது. தன்னம்பிக்கை மற்றும் திறமை இரண்டும் இணையும்போது உலகில் அனைத்தையும் சாதிக்க முடியும். இவ்விரண்டையும் இணைத்துதான் நான் கிரிக்கெட்டில் முன்னணி இடத்துக்கு வந்தேன்.

கிரிக்கெட் வாரிசு அர்ஜுன்

கிரிக்கெட் வாரிசு அர்ஜுன்

எனது தந்தைக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஈடுபாடு இல்லாதபோதும் என்னை அவர் பெரிதும் ஊக்குவித்ததார். இவ்விஷயத்தில் எனது சகோதரர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். என்னைப் போலவே எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் கொண்டுள்ளான். அவனிடம் எதை செய்தாலும் அதில் உறுதியான ஈடுபாடு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

'டாக்(ட்)டர்' சாரா

'டாக்(ட்)டர்' சாரா

எனது மகள் சாரா தனது தாயை போல் மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு விருப்பமானதை தேர்வு செய்ய அவருக்கும் முழு சுதந்திரம் அளித்துள்ளேன். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

Story first published: Thursday, July 24, 2014, 12:06 [IST]
Other articles published on Jul 24, 2014
English summary
Once again terming it his best Test ton, batting legend Sachin Tendulkar said his career took flight following the knock of 114 on a bouncy WACA track in 1992, adding that the innings against a hostile Australian attack in Perth gave him immense confidence.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X