For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சானியா மிர்சாவின் டென்னிஸ் வாழ்க்கையில் புதிய சாதனை!

By Veera Kumar

டெல்லி: உலக இரட்டையர் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார், இதுதான் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் மிகச்சிறந்த ரேங்காகும். பல்வேறு காயங்களுக்கு பிறகும் அவர் இந்த சாதனையை எட்டிப்பிடித்து டென்னிசில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு அடித்தளமிட்டுள்ளார்.

தரவரிசை வெளியீடு

தரவரிசை வெளியீடு

உலக டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை உலக டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சானியா மகிழ்ச்சி

சானியா மகிழ்ச்சி

தன்னுடைய காயத்திற்கு 3வது முறையாக அறுவை சிகிச்சை செய்த பின்னரும், தரவரிசையில் முன்னேற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சானியா தெரிவித்துள்ளார்.

சாதனை நாயகி

சாதனை நாயகி

2003ல் டென்னிஸ் விளையாட்டில் கால்பதித்த சானியா மிர்சா, இதுவரை ஒற்றையர் பிரிவில் 271 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், 161ல் தோல்வியை தழுவியுள்ளார். இரட்டையர் பிரிவில் 300 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், 157ல் தோல்வி கண்டுள்ளார்.

ஆடவர்கள் பின்தங்கல்

ஆடவர்கள் பின்தங்கல்

டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ரேங்க் பட்டியலில், இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் 10 இடங்கள் பின்தங்கி 135வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதே போன்று ஆடவர் இரட்டையிர் பிரிவில், லியாண்டர் பயஸ் 13வது இடத்தில் நீடிக்கிறார். ரோஹன் போபண்ணா 3 இடங்கள் பின்தங்கி 20 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Story first published: Monday, July 7, 2014, 17:05 [IST]
Other articles published on Jul 7, 2014
English summary
Indian tennis ace Sania Mirza achieved a career best rank of No 5 in the world as the new WTA doubles chart was released on Monday.
 Sania, who turned a pro in 2003 and overcame a career-threatening wrist injury in between, has entered the top-five for the first time in her career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X