For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவாஸ்கர் உங்க வேலை முடிஞ்சது, போய்ட்டு வாங்க.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

டெல்லி: ஐபிஎல் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுனில் கவாஸ்கரின் வேலை தற்போது முடிந்து விட்டதால், அவரை இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து விடுவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இனிமேல் கவாஸ்கர் தனது விருப்பப்படி மற்ற வேலைகளில் ஈடுபடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கவாஸ்கரின் இடைக்காலத் தலைவர் பதவி முடிவுக்கு வந்துள்ளது.

இனிமேல் டிவி வர்னணை, பத்திரிகைகளுக்கு எழுவது, வீரர்களை விமர்சிப்பது உள்ளிட்ட பிற பணிகளில் மறுபடியும் கவாஸ்கர் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

இனிமேல் கவாஸ்கர் ஃப்ரீ

இனிமேல் கவாஸ்கர் ஃப்ரீ

இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து விட்டதால் கவாஸ்கரின் பணியும் முடிவுக்கு வருகிறது என்று கூறியது.

ஜூன் 1ம் தேதி முதல்

ஜூன் 1ம் தேதி முதல்

கவாஸ்கரை ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இடைக்காலத் தலைவராக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அவர் ஐபிஎல் போட்டிகளை மட்டும் பார்த்துக் கொள்வார் என்றும் ஷிவ்லால் யாதவ், இன்னொரு இடைக்காலத் தலைவராக, பிற பணிகளைப் பார்ப்பார் என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

நான் என்ன செய்ய...

நான் என்ன செய்ய...

ஜூன் 1ம் தேதி ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தனது நிலை என்ன, தனது பணி என்ன என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு கோர்ட்டைக் கேட்டுக் கொண்டிருந்தார் கவாஸ்கர். இதைத் தொடர்ந்து கவாஸ்கரின் இடைக்காலத் தலைவர் பணி முடிந்து விட்டதாக கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. இனிமேல் உங்களது விருப்பபடியான வேலைகளைச் செய்யத் தடை இல்லை என்றும் கோர்ட் கவாஸ்கருக்குத் தெரிவித்துள்ளது.

வசூல் போச்சு

வசூல் போச்சு

கவாஸ்கர் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்த சமயத்தில் அவர் டிவி வர்னணை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இதில் அவருக்கு நல்லவருவாய் கிடைத்து வந்தது என்பது நினைவிருக்கலாம். அந்த வகையில் இது அவருக்கு சற்று இழப்புதான்.

Story first published: Saturday, July 19, 2014, 14:32 [IST]
Other articles published on Jul 19, 2014
English summary
The Supreme Court Friday relieved legendary cricketer Sunil Gavaskar as the interim president of the Board of Control for Cricket in India (BCCI) in charge of Indian Premier League (IPL) 2014 and said that he was free to take up any assignment.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X