For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2023க்குள் 6 தொடர்களில் ஆடுகிறோம்.. இந்தியா, பாகிஸ்தான் திடீர் முடிவு!

லாகூர்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. 2015 முதல் 2023ம் ஆண்டுக்குள் இரு அணிகளும் மோதும் ஆறு கிரிக்கெட் தொடர்களை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளனவாம்.

இந்த ஆறு தொடர்களுமே முழு அளவிலான கிரிக்கெட் தொடர்களாக இருக்குமாம். அதாவது டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டுவென்டி 20 போட்டிகள் கொண்டதாக இது இருக்குமாம்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேர் கடல் மார்க்கமாக வந்து கடும் தாக்குதலை நடத்திய பின்னர் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் பாகிஸ்தான் மட்டும் வந்தது

ஆனால் பாகிஸ்தான் மட்டும் வந்தது

இருப்பினும் 2012 டிசம்பர் - 2013 ஜனவரி மாதத்தில் ஒரு குறுகிய ஒரு நாள் தொடருக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து போனது.

மறுபடியும் முழு அளவிலான தொடர்

மறுபடியும் முழு அளவிலான தொடர்

இந்த நிலையில் இரு நாட்டு அணிகளும் மறுபடியும் முழு அளவிலான தொடர்களில் பங்கேற்க தீர்மானித்துள்ளன.

ஒப்பந்தம் கையெழுத்தானது

ஒப்பந்தம் கையெழுத்தானது

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாம்.

4 தொடர்களை பாகிஸ்தான் நடத்தும்

4 தொடர்களை பாகிஸ்தான் நடத்தும்

இந்த ஆறு தொடர்களில் நான்கு தொடர்களை பாகிஸ்தான் நடத்தும். 2 தொடர்களை இந்தியா நடத்துமாம்.

14 டெஸ்ட் - 30 ஒரு நாள் போட்டிகள்

14 டெஸ்ட் - 30 ஒரு நாள் போட்டிகள்

இந்தத் திட்டத்தின்படி இரு அணிகளும் 14 டெஸ்ட் போட்டிகள், 30 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடும்.

Story first published: Thursday, May 15, 2014, 14:32 [IST]
Other articles published on May 15, 2014
English summary
There is good news for India and Pakistan cricket fans. Both countries' boards have agreed to play six full series between 2015 and 2023. Since the terrorist attacks on Mumbai in 2008, India had suspended all bilateral series with the neighbours. However, Pakistan did tour India for a short limited overs series in December, 2012-January 2013. Yesterday, Pakistan Cricket Board (PCB) has signed a memorandum of understanding with India to play six full series, "AFP" news agency reported.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X