For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வீணாகும் வரிப்பணம்... பொதுமக்கள் எதிர்ப்பு: பிரேசில் 'சாக்கரெக்ஸ்’கால்பந்து மாநாடு ரத்து

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற இருந்த உலகக் கோப்பை கால்பந்து மாநாடு ரத்து செய்யப் பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்புக் காரணமாகவே இம்மாநாடு ரத்து செய்யப் பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

பிரேசில் நாட்டில் அடுத்த வருடம் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்னர் ரியோ டி ஜெனிரோவில் உலக அளவிலான சாக்கரெக்ஸ் என்ற கால்பந்து மாநாடு நடத்தப்பட திட்டமிடப் பட்டிருந்தது.

மக்களின் வரிப்பணம் தேவையற்ற முறையில் வீணாவதாக பிரேசில் நாட்டு மக்களின் எதிர்ப்புக் குரல் வலுத்து வரும் நிலையில், திடீரென சாக்கரெக்ஸ் மாநாடு ரத்து செய்யப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த எதிர்ப்பு....

பலத்த எதிர்ப்பு....

கடந்த ஜூன் மாதம் உலககோப்பைக்கு முன்னதாக நடைபெறும் கான்பெடரேஷன் கோப்பை போட்டி நடைபெற்றது. அப்போதே மக்களிடையே இந்த போட்டிக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

வீணாகும் வரிப்பணம்....

வீணாகும் வரிப்பணம்....

பிரேசிலில் பொதுமக்களின் கல்விக்கும், மருத்துவ செலவிற்கும் பயன்படாத அரசாங்க வரிப்பணம் விளையாட்டுத்துறையில் செலவழிக்கப்படுவதை கண்டித்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலக விளையாட்டுக் குழு....

உலக விளையாட்டுக் குழு....

சாக்கரெஸ் மாநாட்டை பிரேசிலின் புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் நடத்த நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். மேலும், இம்மாநாட்டில் 4,000க்கும் மேற்பட்ட உலக விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக இருந்தனர்.

அறிக்கை...

அறிக்கை...

இந்நிலையில், மாநாட்டு அமைப்பாளர்கள் போதிய அளவு நிதி வசூல் பெறாததினாலேயே இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் இறுதி மாநாடு நடைபெறவில்லை என்பதை உறுதி செய்து உலகக்கோப்பை அமைப்பாளர்கள் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.

இழப்பீட்டுத் தொகை....

இழப்பீட்டுத் தொகை....

அதில், ‘பொதுமக்களிடையே நிலவும் அமைதியின்மை காரணமாக ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் விளையாட்டுத்துறை செயலாளர் அரசியல் சார்ந்த முடிவினை எடுத்துள்ளார் ஆயினும், வரும் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை மரக்கானா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை கோர இருக்கிறோம்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

வெறுப்பைத் தரும் ரத்து....

வெறுப்பைத் தரும் ரத்து....

இந்த மைதானத்தில்தான் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐந்து கண்டங்களையும் இணைத்து 33 நிகழ்ச்சிகளை வழங்கிய நிலையில் மாநாட்டு நிகழ்ச்சி இவ்வாறு ரத்து செய்யப்படுவது வெறுப்பைத் தருவதாக இருக்கின்றது என்றும் உலகக் கோப்பை அமைப்பாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Story first published: Thursday, November 7, 2013, 7:29 [IST]
Other articles published on Nov 7, 2013
English summary
Fears about disruption to next year's World Cup have been raised after the key global football conference Soccerex was cancelled because of continuing civil unrest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X