For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷூ கூட போடாம வெறும் காலோட விளையாட விட்டுட்டாங்களே பரமா....!

டாக்கா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை வெறும காலுடன் கால்பந்து விளையாட விட்டு நூதனப் பயிற்சியளித்துள்ளனர்.

கேப்டன் டோணி, விராத் கோஹ்லி உள்பட அனைத்து இந்திய வீரர்களுமே காலில் ஷூ கூட போடாமல் கால்பநது விளையாடி பயிற்சி எடுத்துள்ளனர்.

இது மிகவும் ரிஸ்க்கான விஷயம் என்றாலும் கூட காலுக்குப் பலம் ஏற்படுத்துவதற்காக இப்படி விளையாட விட்டனராம். இப்படி விளையாடப் போய்த்தான் யுவராஜ் சிங்குக்குக் காயம் ஏற்பட்டு இப்போது நாளைய அரை இறுதிப் போட்டியில அவர் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு மணி நேரம்

ஒரு மணி நேரம்

வங்கதேச கிரிக்கெட் வாரிய அகாடமி மைதானத்தில் ஒரு மணி நேரம் இந்த நூதன கால்பந்தாட்டத்தில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டு ஆடினர்.

கிரிக்கெட்டை மறந்துடுங்க

கிரிக்கெட்டை மறந்துடுங்க

இந்த ஒரு பயிற்சியை மட்டுமே நேற்று இந்திய வீரர்கள எடுத்தனர். கிரிக்கெட் பயிற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை.

ஷூவோடு உள்ள போன கோஹ்லி

ஷூவோடு உள்ள போன கோஹ்லி

முதலில் ஷூ போடக் கூடாது என்று தெரியாமல் ஷூவோடு உள்ளே போய் விட்டார் கோஹ்லி. பின்னர் தவன் வநது அவரிடம் ஷூவைக் கழட்டுப்பா முதல்ல என்று கூறி கழற்ற வைத்தார்.

முதல்ல கோகோதான்

முதல்ல கோகோதான்

வழக்கமாக பிராக்டிஸின்போது கோகோ ஆடுவது வழக்கம். ஆனால் கடந்த 2006, 2010ல் இந்த விளையாட்டு விளையாடப் போய் யுவராஜ், ரோஹித் சர்மா ஆகியோர் காயம் அடைந்ததால் இந்த முறை கோகோவை எடுத்து விட்டு கால்பந்துக்கு மாறினர். அப்படியும் யுவராஜ் நேற்று காயமடைந்து விட்டார்.

சுதர்சன் வி.பிதான் காரணம்

சுதர்சன் வி.பிதான் காரணம்

இந்திய வீரர்கள் வெறும் காலுடன் கால்பந்து விளையாடும் ஐடியாவைக் கொடுத்தவர் பயிற்சியாளர் வி.பி.சுதர்சன்தானாம். இப்படி வெறும் காலுடன் ஆடினால் கால் பலமடையுமாம்.

எங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா.. அக்தர்

எங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா.. அக்தர்

இந்திய வீரர்கள் வெறும் காலுடன் கால்பந்து விளையாடியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொயப் அக்தர் கூறுகையில், இது எங்களுக்கு சகஜமானது. நாங்கள் அடிக்கடி இப்படி விளையாடுவோம் என்றார் அவர்.

Story first published: Thursday, April 3, 2014, 18:01 [IST]
Other articles published on Apr 3, 2014
English summary
Indian cricketers on Tuesday returned to the field after a day's rest, but they were made to play only football, that too barefoot - a decision some people felt could be risky ahead of their ICC World Twenty20 semi-final against South Africa on Friday. All players and members of the coaching staff removed their shoes for the one-hour game at the Bangladesh Cricket Board Academy ground.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X