For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சானியா மிர்சாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை: தெலுங்கானா அரசு அறிவிப்பு

By Mathi

ஹைதராபாத்: சர்வதேச டென்னிஸ் இரட்டையர் தர வரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ரூ1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

உலக டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை அண்மையில் உலக டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டது. இதில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Telangana CM announces Rs 1 crore grant to Sania Mirza

சானியா தனது கையில் ஏற்பட்ட காயத்தினால் தரவரிசையில் பின்தங்கி இருந்தார். ஆனால் இயல்பு நிலைக்கு திரும்பியதால் போட்டிகளில் பங்கேற்று 5-ம் இடத்துக்கு முன்னேறினார்.

{ventuno}

சானியா மிர்சா ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வருங்காலத்தில் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

இந்த தொகைக்கான செக் இன்று சானியாவுக்கு அளிக்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 22, 2014, 16:42 [IST]
Other articles published on Jul 22, 2014
English summary
Telangana Chief Minister K Chandrasekhar Rao on Monday announced a grant of Rs 1 crore to tennis star Sania Mirza for her training and coaching.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X