For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொச்சி, கொல்கத்தா அணிகளை வாங்கிய டெண்டுல்கர், கங்குலி!!

By Mathi

மும்பை: இந்தியன் சூப்பர் 'லீக்' கால்பந்து (ஐ.எஸ்.எல்) போட்டிக்கான கொச்சி அணியை டெண்டுல்கரும் கொல்கத்தா அணியை கங்குலியும் வாங்கியுள்ளனர்.

இந்தியாவில் பிரபலமான ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்), இந்தியன் பட்மின்டன் லீக் போன்று இந்தியன் கால்பந்து லீக் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தியன் சூப்பர் 'லீக்' கால்பந்து போட்டி தொடர் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுகிறது.

இது இந்தியாவில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் கால்பந்து போட்டி ஆகும். இதில் உலகளாவிய மற்றும் இந்திய கால்பந்து வீரர்கள் விளையாட உள்ளனர்.

Tendulkar, Ganguly foray into football, win ISL bids

மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, குவஹாத்தி, பெங்களூர், கொச்சி, கோவா, புனே ஆகிய 9 நகரங்களைக் கொண்ட அணி உள்ளன. இந்த இடங்களில் உள்ள அணிகளுக்கான ஏலம் நடத்தப்பட்டுள்ளது.

ஏலத்தில் ஐ.பி.எல். உரிமத்தை வைத்துள்ள சில அணிகள் ஆர்வம் காட்டியுள்ளன. கொச்சி அணியினை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியினை முன்னாள் கேப்டன் கங்குலி வாங்கியுள்ளார்.

மும்பை அணியை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், புனே அணியை நடிகர் சல்மான்கான், குவஹாத்தி அணியை நடிகர் ஜான் ஆப்ரஹாம் வாங்கியுள்ளனர்.

Story first published: Sunday, April 13, 2014, 15:23 [IST]
Other articles published on Apr 13, 2014
English summary
Sachin Tendulkar and Sourav Ganguly were among the host of high-profile winning bidders as the organises of the much-anticipated Indian Super League today unveiled the eight franchises for the event that is set to take Indian football by storm.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X