For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து! டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது!!

By Veera Kumar

லண்டன்: இன்று துவங்கவிருந்த இந்தியா-இங்கிலாந்து நடுவேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இதையடுத்து அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பயிற்சியாளர் பிளட்சர் டம்மியாக்கப்பட்டு, உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர் மற்றும் அருண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அணியின் இயக்குநராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

மழையால் ரத்து

மழையால் ரத்து

புதிய ரத்தம் பாய்ச்சப்பட்ட இந்திய அணி, ஒருநாள் போட்டித்தொடரின் முதல்போட்டியில் இங்கிலாந்தை இன்று எதிர்கொள்வதாக இருந்தது. பிரிஸ்டல் நகரில் தொடங்கவிருந்த இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. 2வது போட்டி 27ம்தேதி கார்டிஃப்பில் நடக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் அதிரடி

பயிற்சி ஆட்டத்தில் அதிரடி

மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக நடந்த பயிற்சி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. மேலும் அவுட் ஆப் பார்ம், விராட் கோஹ்லியும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். கரண் ஷர்மா சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

புதுவீரர்கள்

புதுவீரர்கள்

இங்கிலாந்து தனது டெஸ்ட் அணியில் விளையாடிய வீரர்களுடன் மேலும் நால்வரை அணியில் சேர்த்துக்கொண்டுள்ளது. 17 பேர் கொண்ட இந்திய அணியில், அம்பத்தி ராய்டு, சஞ்சு சாம்சன், மோகித் ஷர்மா, கரண் ஷர்மா, உமேஷ் யாதவ், தவால் குல்கர்ணி ஆகியோர் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். எஞ்சியோர், டெஸ்ட் அணியில் விளையாடிய வீரர்களாகும்.

Story first published: Monday, August 25, 2014, 19:29 [IST]
Other articles published on Aug 25, 2014
English summary
Their morale battered by the Test series debacle, India would look to make a fresh beginning and salvage lost pride when they take on England in a five-match ODI cricket series starting here Monday. and if that is not obtained thereafter, it heaps even more of it on the middle-order.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X