For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இந்தியா, நமஸ்தே!.. நான் இங்கே இருக்கேன்"... பெங்களூர் வந்த உசேன் போல்ட்!

பெங்களூர்: உலகின் மின்னல் வேக மனிதர் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட் இந்தியா வந்துள்ளார். பெங்களூர் வந்துள்ள அவர் கண்காட்சிக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார். இன்று மாலை இப்போட்டி சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் அசைக்க முடியாத சாம்பியன் ஆவார். உலகின் அதி வேக மனிதர் என்ற பெயரையும் பெற்றவர் உசேன் போல்ட்.

இவர் தற்போது பெங்களூர் வந்துள்ளார். தலா 7 வீரர்கள் கலந்து கொள்ளும் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இன்று மாலை காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக அவர் வந்துள்ளார்.

பூமா

பூமா

விளையாட்டு ஷூ தயாரிப்பு நிறுவனமான பூமா இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

7 வீரர்கள்

7 வீரர்கள்

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணிகளிலும் தலா 7 வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு அணிக்கும் 4 ஓவர்கள்.

பூமாவின் தூதர்கள்

பூமாவின் தூதர்கள்

போல்ட்டும், யுவராஜும் பூமாவின் பிராண்ட் அம்பாசடர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் இந்தியா வந்துட்டேன்

முன்னதாக பெங்களூர் வந்து சேர்ந்த போல்ட் டிவிட்டரில் தனது இந்திய வருகையை குறிப்பிட்டு டிவிட் செய்திருந்தார். அதில், இந்தியா நான் இங்கு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

மைசூர் தலைப்பாகையுடன்

அதேபோல இன்னொரு டிவிட்டில் மைசூர் தலைப்பாகை அணிந்து நூதனமான போஸுடன் காணப்பட்டார் போல்ட். அதில், ஹேய் யுவராஜ் சிங்.. நான் உன் பக்கத்தில் இருக்கிறேன். கொஞ்சம் கிரிக்கெட்டில் மோதிப் பார்க்கலாமா.. என்று அதில் யுவராஜை சீண்டியுள்ளார்.

முதல் முறையாக

போல்ட் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். போல்ட் தடகள வீரராக இருந்தாலும் கூட கிரிக்கெட்டிலும் கலக்குபவர். தான் தடகளத்திற்கு வந்திருக்காவிட்டால் இன்னேரம் வேகப் பந்து வீச்சாளராக வலம் வந்திருப்பேன் என்று பலமுறை கூறியுள்ளார் போல்ட் என்பது நினைவிருக்கலாம்.

நட்டு போல்ட் எல்லாம் பத்திரம்ப்பா.. போல்ட் பந்து வீசப் போகிறார்!

Story first published: Tuesday, September 2, 2014, 16:26 [IST]
Other articles published on Sep 2, 2014
English summary
The fastest man on the planet, Usain Bolt of Jamaica arrived in Bangalore today to face off in a exhibition cricket match against India left-hander Yuvraj Singh at the M Chinnaswamy Stadium this evening. Harbhajan Singh and Zaheer Khan will also be part of this seven-a-side cricket game of four overs each, organised by Puma.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X