For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சிக்ஸர் கிங்" யுவராஜ் அணியை அதிரடியாக வீழ்த்திய "ராக்கெட் ராஜா" உசேன் போல்ட்!

பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த காட்சி கிரிக்கெட் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள சாம்பியன் உசேன் போல்ட், யுவராஜ் சிங் தலைமையிலான அணியை அபாரமாக வீழ்த்தினார்.

உசேன் போல்ட் கிரிக்கெட்டிலும் தனது அட்டகாசத் திறமையை நேற்று நிரூபித்தார். அபாரமான ஐந்து சிக்ஸர்களைப் பறக்க விட்டு ஸ்டேடியத்தை கலகலக்க வைத்தார். இதில் 2 சிக்ஸர்கள் அடுத்தடுத்துப் பறந்தன.

இறுதியில் டீம் போல்ட் அணி வெற்றி பெற்றது. டீம் யுவராஜ் அணி தோல்வி அடைந்தது.

பூமாவுக்காக

பூமாவுக்காக

பூமா ஷூ நிறுவனம் சார்பில் இந்த காட்சி கிரிக்கெட் போட்டி நடந்தது. யுவராஜ், உசேன் போல்ட் அணிகளில் தலா 7 வீரர்கள் இடம் பெற்றனர். தலா 4 ஓவர்கள் வீசப்பட்டன.

மழை வந்து மிரட்டல்

மழை வந்து மிரட்டல்

நேற்று மாலை போட்டி தொடங்கியதும் சின்னதாக மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்படுவது போல தெரிந்தது. ஆனால் மழை நின்றதால் போட்டி தொடர்ந்தது. போட்டியைக் காண 5000 பேர் கூடியிரு்நதனர்.

9.58

9.58

போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர். அவர் 9.58 விநாடிகள் என்ற சாதனையை வைத்துள்ளார். இதைக் குறிக்கும் வகையில் அவர் அணிந்திருந்த ஜெர்சியின் பின்னால் 9.58 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது.

அடி.. அடி.. அடி!

அடி.. அடி.. அடி!

போல்ட் இப்போட்டியில் கிரிக்கெட்டிலும் தான் கிங் என்பதை நிரூபித்தார். யுவராஜ் அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். 19 பந்துகளில் 45 ரன்களை அவர் குவித்தார்.

சிக்ஸர் மழை

சிக்ஸர் மழை

அதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். அதிலும் 2 சிக்ஸர்களை அடுத்தடுத்து அவர் ஓட விட்டார்.

போல்ட் அணியில் ஹர்பஜன் சிங்

போல்ட் அணியில் ஹர்பஜன் சிங்

போல்ட் அணியில் ஹர்பஜன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். தனது அணியின் பவுலிங்கை போல்ட்டே தொடங்கினார். அதேபோல யுவராஜ் சிங் அவரது அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கினார்.

கிரிக்கெட் முடிந்ததும் ஓட்டம்

கிரிக்கெட் முடிந்ததும் ஓட்டம்

இந்தக் காட்சிப் போட்டி முடிந்ததும் 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடந்தது. இதில் போல்ட்டும், யுவராஜ் சிங்கும் கலந்து கொண்டனர்.

ஓட்டத்தில் யுவராஜ் வெற்றி

ஓட்டத்தில் யுவராஜ் வெற்றி

கிரிக்கெட்டில் போல்ட் வென்ற போதிலும் ஓட்டப் போட்டியில் யுவராஜ் சிங் வென்றார். ஆனால் எல்லாம் ஜாலிக்காகத்தான்....!

Story first published: Wednesday, September 3, 2014, 11:29 [IST]
Other articles published on Sep 3, 2014
English summary
'Speed king' Usain Bolt showed his cricket skills here at the M Chinnaswamy Stadium, smashing five sixes including two successive ones to seal the exhibition four-over match against Team Yuvraj Singh during an event organised by Puma. Bolt's maiden visit to India was a memorable one for the Jamaican himself and over 5,000 fans who were at the stadium on a wet Tuesday evening.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X