For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடிகை அனுஷ்காவை கூடவே அழைத்துவர கோஹ்லி சொன்ன காரணம்...மவுனம் கலைத்த பிசிசிஐ

By Veera Kumar

லண்டன்: விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்யப்போவதாக உறுதியளித்ததால் இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணியுடன் அனுஷ்கா அழைத்துர அனுமதிக்கப்பட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க, இந்திய வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளை உடன் அழைத்து சென்றதும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிசிசிஐயிடம் கேட்கிறார்கள்

பிசிசிஐயிடம் கேட்கிறார்கள்

இதுகுறித்து இங்கிலாந்து பத்திரிகையொன்றுக்கு பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பெயர் தெரிவிக்க விரும்பாத பேட்டியொன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: மனைவிகளை அழைத்துவர வீரர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோஹ்லி தனது காதலியை அழைத்துவர ஏன் அனுமதித்தீர்கள் என்று பிசிசிஐயிடம் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

கல்யாணம் கட்டிக்க போறோமுங்க..

கல்யாணம் கட்டிக்க போறோமுங்க..

கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தெரிவித்து அனுமதி கேட்டதால் பிசிசிஐ அந்த அனுமதியை அளித்தது. சொல்லப்போனால் முதலில் நாங்கள் தயங்கினோம். ஆனால் அவர்கள் கூறிய உறுதிமொழியை நம்பித்தான் அனுஷ்காவையும் லண்டன் வர சம்மதித்தோம்.

எப்படி மண்ணை தூவினார் பார்த்தீர்களா?

எப்படி மண்ணை தூவினார் பார்த்தீர்களா?

மீடியாக்களின் கண்களில் படாமல் அனுஷ்கா போட்டிகளை பார்க்க வந்திருந்தார். கோஹ்லியும், அவரும் ஒன்றாக ஊரை சுற்றியதையும் கூட மீடியாக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

பூனை குட்டி பத்திரம் கோஹ்லி!

பூனை குட்டி பத்திரம் கோஹ்லி!

மீடியாக்களின் கண்களில் அனுஷ்காவும், கோஹ்லியும் ஒன்றாக சுற்றுவது தென்பட்டுவிடக்கூடாது என்று பிசிசிஐ கவலைப்பட்டது. ஆனால் சில நிர்வாகிகள்தான் கூறினர் "பூனைக்குட்டி பையைவிட்டு வெளியே வராமல் கோஹ்லி பார்த்துக்கொள்வார்" என்று. இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Story first published: Friday, August 22, 2014, 12:58 [IST]
Other articles published on Aug 22, 2014
English summary
Virat Kohli and his bollywood actress girlfriend Anushka Sharma "were planning to get married" and hence granted permission to stay together in England, according to the Board of Control for Cricket in India (BCCI).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X