For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராத் ஹோக்லியின் ட்விட்டர் ஃபாலோயர்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன்

By Mayura Akilan

டெல்லி: பிரபல கிரிக்கெட் வீரர் விராத் ஹோக்லியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3.1 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ஐ.பி.எல் சீசன் 7 கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ரன்களை குவித்தாரோ இல்லையோ, ஆனால் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஹோக்லியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது.

ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கோஹ்லி தான் விளையாடிய 9 இன்னிங்ஸ்சிலும் எடுத்த ரன்கள் மொத்தமே 144தான் அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஹோக்லி புகழ்

ஹோக்லி புகழ்

ஆனாலும் ஹோக்லியின் புகழ் மங்காமல் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் ஃபாலோயர்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஹோக்லியின் ட்விட்டர்

ஹோக்லியின் ட்விட்டர்

ஹோக்லியை ட்விட்டரில் 3.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அதேசமயம் ஃபேஸ்புக் மூலம் 10 மில்லியன் பேர் பின்தொடர்வதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.

அதிகரித்த ஃபாலோயர்கள்

அதிகரித்த ஃபாலோயர்கள்

ஐ.பி.எல் போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்த ட்விட்டர் ஃபாலோயர்களை விட மூன்று வாரத்திற்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாம். கிட்டத்தட்ட 50000 பேர் புதிய ஃபாலோயர்கள் ஹோக்லியின் ட்விட்டரில் இணைந்துள்ளனர். டாப்டென்னில் ஹோக்லிதானாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6,50,000 பேர் பின் தொடர்ந்தனர். ஐ.பி.எல் தொடங்கப்பட்ட பின்னர் இது 6,58000 பேராக உயர்ந்தது. அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4,50000 பேர் பின் தொடர்கின்றனர். அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட கூடுதலான ஃபாலோயர்களை பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பேசப்படும் அணிகள்

பேசப்படும் அணிகள்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் அணிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 14, 2014, 15:13 [IST]
Other articles published on May 14, 2014
English summary
Runs are not flowing from Virat Kohli's bat this Indian Premier League bat but his popularity continues to rise on social networking sites. Kohli now has 3.1 million followers on Twitter while he breached the 10 million mark on Facebook last month. On the field, the Royal Challengers Bangalore captain has managed 144 runs from nine innings at an average of 18.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X