For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குறிப்பிடத்தக்க வெற்றி.. அருமையான தினம்: "கடவுள்" வாழ்த்து!

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்ற இந்தியாவை முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார், வாழ்த்தியுள்ளார்.

இது அருமையான குறிப்பிடத்தக்க வெற்றி. அருமையான தினம் இது என்றும் சச்சின் வர்ணித்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு இதுவரை கிடைத்துள்ள 2வது வெற்றியாகும் இது. அதையும் கூட 28 வருடங்களுக்குப் பின்னர்தான் பெற்றுள்ளனர்.

இஷாந்த்துக்கு சச்சின் பாராட்டு

இஷாந்த்துக்கு சச்சின் பாராட்டு

இந்த வெற்றி குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது குறிப்பிடத்தக்க வெற்றி. நாட்டு மக்களுக்கு இது அருமையான, முக்கியமானம் என்று கூறியுள்ள சச்சின் இஷாந்த் சர்மாவையும் பாராட்டியுள்ளார்.

ரொம்பப் பெருமையா இருக்கு பாய்ஸ்

ரொம்பப் பெருமையா இருக்கு பாய்ஸ்

நமது வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 28 வருடங்களுக்குப் பிறகு லார்ட்ஸில் வந்துள்ள வெற்றி இது. ரொம்பப் பெருமையாக இருக்கிறது.

இஷாந்த் சூப்பரப்பு

இஷாந்த் சூப்பரப்பு

இஷாந்த் சர்மா பந்து வீசியதை நான் பார்த்தேன். அருமையாக இருக்கிறது. அவருக்காக மகிழ்கிறேன். நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளார் இஷாந்த். கடின உழைப்பாளி. கடுமையாக போராடக் கூடியவர். திறமசாலியும் கூட.

இங்கிலாந்தில் வெல்வது சிறப்பானது

இங்கிலாந்தில் வெல்வது சிறப்பானது

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் வெல்வது எப்போதுமே சிறப்பானது. இந்த வெற்றியைப் பார்க்கும்போது 2006ல் ஜோகன்னஸ்பர்க்கிலும், 2010ல் டர்பனிலும் நாம் வென்றது நினைவுக்கு வருகிறது. அந்தப் போட்டிகளை இது நினைவூட்டுகிறது என்றார்.

டெண்டுல்கர்தான்

டெண்டுல்கர்தான் "பர்ஸ்ட்"

ஆனால் லார்ட்ஸில் முதலில் சச்சின் டெண்டுல்கர்தான் வென்றார். அதாவது சில வாரங்களுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டையொட்டி நடந்த காட்சிப் போட்டியில் சச்சின் தலைமையிலான எம்சிசி கிளப் அணி, ஷான் வார்னே தலைமையிலான ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங் கூட கால்ல விழுந்து கும்பிட்டாரே...

யுவராஜ் சிங் கூட கால்ல விழுந்து கும்பிட்டாரே...

அப்போது ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணியின் யுவராஜ் சிங் சதம் கூட அடித்தார். மேலும் சச்சின் காலையும் தொட்டுக் கும்பிட்டு அசத்தினார் என்பதும் நினைவிருக்கலாம்.

Story first published: Tuesday, July 22, 2014, 18:00 [IST]
Other articles published on Jul 22, 2014
English summary
Calling it a "remarkable win" and a "precious day" for the entire country, former captain and batting legend Sachin Tendulkar hailed the Indian team for winning the Lord's Test against England yesterday (July 21). India defeated England by 95 runs on the fifth and final day of the second Test on Monday to go 1-0 up in the five-match rubber.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X