For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

''எமிரேட்ஸ் ரொம்பச் சுடுது''.. இப்பவே 'பப்பரப்பா' மாதிரி பேசுறாரே டோணி?!

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரொம்ப சூடாக இருக்கிறது. இங்கு விளையாடுவது என்பது ரொம்பச் சவாலானது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி இப்போதே சொல்லி வைத்து விட்டார்.

எனவே மக்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடாவிட்டால் அதற்கு வீரர்கள் காரணமாக இருக்க முடியாது.. மாறாக எமிரேட்ஸின் சூடுதான் காரணமாக இருக்கும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும் என்று தெரிகிறது.

நாளை தனது முதல் போட்டியைச் சந்திக்கவுள்ள நிலையில் சென்னை கேப்டன் இப்போதே சூட்டை பிரதானக் கவலையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் டோணியின் பேட்டி.. தொடர்ந்து படியுங்க....

அடாப்ட் ஆகனும் முதல்ல.. அப்புறம்தான் ஆட்டம்

அடாப்ட் ஆகனும் முதல்ல.. அப்புறம்தான் ஆட்டம்

ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய வீரர்கள் பலர் நேரடியாக இங்கு வந்துள்ளனர். சிலர் நியூசிலாந்திலிருந்தும் அணிக்கு வந்துள்ளனர். முதலில் அடாப்ட் ஆகி விரைவாக ஆட முயற்சிக்க வேண்டும்.

சூடு சாஸ்திதான்

சூடு சாஸ்திதான்

இங்கு வெப்பநிலை கூடுதலாகவே உள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா போல இங்கு இல்லை. சூடு ஜாஸ்திதான்.

ரொம்பத்தான் சுடுது....

ரொம்பத்தான் சுடுது....

ரொம்பவே சூடு உள்ளது. அதேசமயம் ஈரப்பதமும் ஜாஸ்தியாகவே உள்ளது. ஆனால் டெல்லி போலத்தான் இங்கும் சூழல் உள்ளது.

சவால்தான் பாஸ்

சவால்தான் பாஸ்

எனவே எமிரேட்ஸில் ஆடுவது சவாலான விஷயம்தான். ஆனால் இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அது ஆறுதலாக உள்ளது.

ஆரம்பிச்சுட்டா பிக்கப் ஆகிடுவோம்ல

ஆரம்பிச்சுட்டா பிக்கப் ஆகிடுவோம்ல

ஆனால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஒரு போட்டியில் கிளிக் ஆகி ஆட ஆரம்பித்து விட்டால் பிறகு நிற்க மாட்டோம்.

நிலைச்சு ஆடனும்

நிலைச்சு ஆடனும்

அனைத்து வீரர்களும் நிலைத்து ஆட வேண்டியது முக்கியம். அப்போதுதான் வெற்றி எளிதாகும்.

அரை இறுதிதான் முதல் டார்கெட்

அரை இறுதிதான் முதல் டார்கெட்

அரை இறுதிக்குள் நுழைவதுதான் முதல் இலக்காக இருக்கும். அதுவரை அனைவரும் இணைந்து திட்டமிட்டு ஆட வேண்டியது அவசியம்.

நாக் அவுட் வந்துச்சுன்னா பின்னனும்

நாக் அவுட் வந்துச்சுன்னா பின்னனும்

நாக் அவுட் போட்டிகளில் அனைவரும் அவரவர் திறமையை முழுமையாக வெளிக் கொணர வேண்டும். அது முக்கியமானது என்றார டோணி.

டீமே மாறிப் போச்சுப்பா

டீமே மாறிப் போச்சுப்பா

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 6 வருடங்களாக இருந்தது போல இப்போது இல்லை. நிறையப் பேர் மாறியள்ளனர். பல முக்கிய கைகள் போய் விட்டன.

ஹஸ்ஸி இல்லை

ஹஸ்ஸி இல்லை

முக்கியமாக மைக் ஹஸ்ஸி இல்லை. அவர் மும்பைக்குப் போய் விட்டார். அதேசமயம் பழையவர்களில் முக்கியமானவர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, வேயன் பிராவோ ஆகியோர் உள்ளனர்.

மெக்கல்லம்

மெக்கல்லம்

அதேபோல புதியவர்களில் மெக்கல்லம் முக்கியமான வீரர். அபாயகரமான பாப் டு பிளஸ்ஸிஸும் அணியில் இருக்கிறார்.

பார்க்க நல்லாத்தான் இருக்கு.. ஆடட்டும், பார்க்கலாம்.

Story first published: Thursday, April 17, 2014, 12:15 [IST]
Other articles published on Apr 17, 2014
English summary
Chennai Super Kings captain Mahendra Singh Dhoni feels adjusting to the conditions in UAE will be the biggest challenge for his team though he expects the two-time champions to at least reach the semifinals of the seventh Indian Premier League (IPL 7). "There are players who are coming from the Asia Cup in Dhaka, some even from New Zealand. The challenge is the ability to adapt and perform quickly," Dhoni said ahead of their tournament opener against Kings XI Punjab here on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X