For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 10-வது சுற்று 'டிரா'வில் முடிந்தது! பட்டத்தை நெருங்குகிறார் கார்சன்!!

By Mathi

சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆனந்த்- நார்வேயின் கார்சன் இடையேயான மோதலில் 10 வது சுற்று டிராவில் முடிவடைந்தது.

ரஷ்யாவின் சோச்சியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சூப்பர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மோதி வருகின்றனர்.

World Chess Championship, Game 10: Anand draws again, Magnus Carlsen inches closer to title​​!

மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப் போட்டியில் கிளாசிக்கல் டைம் கன்ட்ரோல் அடிப்படையில் 40 நகர்த்துதலுக்கு 120 நிமிடங்கள், 20 நகர்த்துதலுக்கு 60 நிமிடங்கள், மற்றும் ஆட்டம் முடியும் வரை 15 நிமிடங்களுடன் ஒரு நகர்த்துதலுக்கு 30 நொடிகள் வழங்கப்படுகிறது.

ஒருவேளை இருவரும் சமமாக இருப்பின் வரும் 27-ந் தேதி டை பிரேக் ஆட்டம் நடைபெறும். 9-வது சுற்று டிராவுக்குப் பின் 5-4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மேக்னஸ் கார்ல்சன் முன்னிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10-வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதையடுத்து, நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

Story first published: Saturday, November 22, 2014, 8:49 [IST]
Other articles published on Nov 22, 2014
English summary
Five-time world champion Viswanathan Anand failed to break the ice and played out another draw in the tenth game of the world chess championship on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X