For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பாடி ஃபைனலுக்காவது ஷகீரா வந்தாரே: கவலையை மறந்து பிரேசில் ரசிகர்கள் ஆட்டம்!

By Siva

ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு நடந்த நிறைவு விழாவில் கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகீரா பாடி, ஆடியதை பார்த்து பிரேசில் ரசிகர்கள் தங்கள் கவலையை மறந்து சிரித்தனர்.

ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடந்து முடிந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை ஜெர்மனி வென்றது.

போட்டி துவங்கும் முன்பு நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஷகீரா

ஷகீரா

நிறைவு விழாவில் கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகீரா, மெக்சிகோவைச் சேர்ந்த கிட்டார் கலைஞர் சான்டனா, பிரேசிலைச் சேர்ந்த கிராமி விருது பெற்ற பாடகி ஐவெட் சாங்கலோ மற்றும் சம்பா நடனப் பள்ளி ஆட்கள் பிரமாண்ட இசை விருந்து படைத்தனர்.

வாகா வாகா

வாகா வாகா

கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியின் துவக்க விழாவில் ஷகீரா பாடிய வாகா வாகா பாடல் மிகவும் பிரபலம் ஆனது.

ஆடை

ஆடை

நல்லா இருந்த கவுனை பல இடங்களில் கிழித்து எறிந்தது போன்ற ஒரு உடையை அணிந்து வந்திருந்தார் ஷகீரா. அதற்கு பெயர் கவுன் என்று கூறுகிறார்கள் சரி போகட்டும் ரசிகர்களுக்கு பிடித்திருந்ததே அது போதாதா?

லா லா லா

லா லா லா

ஷகீரா மேடையில் தனது பிரபலமான பாடலான லா லா லா பாடலை பாட பிரேசில் ரசிகர்கள் தங்கள் நாட்டு அணி தோல்வி அடைந்த துக்கத்தை மறந்து உற்சாகமாக ஆடினர்.

கவர்ச்சி

கவர்ச்சி

ஷகீரா ஆடினால் ஆண்களை கவரும் கவர்ச்சி ஸ்டெப்ஸுகளுக்கு குறைவாகவா இருக்கும். அரங்கில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதந்தனர் என்று தான் கூற வேண்டும்.

மகன்

மகன்

ஷகீரா தனது குட்டி மகன் மிலனை மேடைக்கு தூக்கி வந்து ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

உலகக் கோப்பை துவக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் உலகக் கோப்பை பாடலை பாடி ஆடினார். ஆனால் அவரது பாடலையும், ஆடலையும் பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர். ஷகீராவை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டனர்.

நிம்மதி

நிம்மதி

துவக்க விழாவில் ஷகீரா வராததால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் நிறைவு விழாவில் அவர் போட்ட ஆட்டத்தை பார்த்து மனம் குளிர்ந்து போய்விட்டனர்.

Story first published: Monday, July 14, 2014, 10:42 [IST]
Other articles published on Jul 14, 2014
English summary
Colombian singer Shakira set the stage on fire during the closing ceremony of the FIFA world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X