For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

96க்குப் பிறகு இலங்கைக்கு இது 2வது உலகக் கோப்பை...!

மிர்பூர்: இலங்கைக்கும் முக்கிய ஐசிசி இறுதிப் போட்டிகளுக்கும் ஏழாம் பொருத்தம். பலமுறை இறுதிப் போட்டிக்கு வந்து அடி வாங்கிச் சென்றுள்ளது இலங்கை. இப்படி வரலாறு இலங்கைக்குப் பாதகமாக உள்ள பின்னணியில் இன்று இந்தியாவை டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்த இலங்கை அபாரமான ஆட்டத்தால் டுவென்டி 20 உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று விட்டது.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் போட்டியைச் சந்தித்த இலங்கை அபாரமான ஒருங்கிணைப்புடன் கூடிய ஆட்டத்தால் கோப்பையை வென்றது.

1996ம் ஆண்டு இலங்கை ரணதுங்கா தலைமையில் தனது முதலாவது ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு உலகக் கோப்பை அதற்கு எட்டாத கனியாகவே இருந்தது. இன்று டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்று தனது கோப்பைத் தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ளது.

4 முறை இறுதிப் போட்டியில் காலி

4 முறை இறுதிப் போட்டியில் காலி

இலங்கை அணி இதுவரை நான்கு முக்கிய ஐசிசி இறுதிப் போட்டிகளை இழந்துள்ளது. அதுவும் கடந்த 7 ஆண்டுகளில்.

1996க்குப் பிறகு ஒரு கப்பும் இல்லை

1996க்குப் பிறகு ஒரு கப்பும் இல்லை

1996ம் ஆண்டுக்குப் பிறகு எந்த உலகக் கோப்பைையும் இலங்கை வென்றதில்லை. வெல்லவும் முடியவில்லை.

3வது முறையாக இறுதிப் போட்டிக்கு

3வது முறையாக இறுதிப் போட்டிக்கு

உலகக் கோப்பை டுவென்டி 20 இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறியிருப்பது இது 3வது முறையாகும்.

2009ல் பாகிஸ்தானிடம் தோல்வி

2009ல் பாகிஸ்தானிடம் தோல்வி

2009ம் ஆண்டு முதல் முறையாக அது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போது பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.

2012ல் மேற்கு இந்தியத் தீவுகளிடம்

2012ல் மேற்கு இந்தியத் தீவுகளிடம்

அதேபோல 2012ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுடன் இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வி கண்டது.

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில்

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில்

2007 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 2011ல் இந்தியாவிடம் தோல்வி கண்டது.

சங்கக்கரா, ஜெயவர்த்தனேவுக்கு கடைசி போட்டி

சங்கக்கரா, ஜெயவர்த்தனேவுக்கு கடைசி போட்டி

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் இலங்கையின் மூத்த வீரர்களான மஹளா ஜெயவர்த்தனே, சங்கக்கரா ஆகியோருக்கு கடைசி போட்டியாகும். இத்துடன் அவர்கள் டுவென்டி 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர்.

தோல்வி அடையாத ஒரே அணி

தோல்வி அடையாத ஒரே அணி

நடப்புத் தொடரில் இந்தியா தோல்வியே சந்திக்காத அணியாக இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக வந்துள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அமீத் மிஸ்ரா ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.

பேட்டிங்கிலும் பிரமாதம்

பேட்டிங்கிலும் பிரமாதம்

அதேபோல இந்தியாவின் பேட்டிங்கும் பிரமாதமாக உள்ளது. கோஹ்லி நல்ல பார்மில் உள்ளார். எல்லாப் பந்து வீச்சையும் வெளுத்துக் கட்டுகிறார்.

டோணி சாதனை பறிபோனது

டோணி சாதனை பறிபோனது

இன்றைய போட்டியில் இந்தியா வென்றிருந்தால் டோணிக்குப் புதிய பெருமை கிடைத்திருக்கும். அதாவது டுவென்டி 20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற ஒரே இந்திய கேப்டனாகவும், முக்கிய ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அது பறி போய் விட்டது.

இந்தியாவைப் பழி தீர்த்தது இலங்கை

இந்தியாவைப் பழி தீர்த்தது இலங்கை

2011ல் இந்தியாவில் நடந்த ஒரு நாள் கோப்பை உலகக் கோப்பையை இந்தியாடவிம் இழந்தது இலங்கை. இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதற்கு ஒரு வழியாக இப்போது பழி தீர்த்துக் கொண்டு விட்டனர் இலங்கை வீரர்கள்.

Story first published: Sunday, April 6, 2014, 22:24 [IST]
Other articles published on Apr 6, 2014
English summary
Sri Lanka have a dismal record in the final of ICC tournaments. They lost the 2009 & 2012 World T20 finals, the ICC World Cup finals in 2007 and 201 and now have a chance to redeem themselves against India in the final of the ICC World Twenty20 in Dhaka on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X