For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதே 'அராத்து' அடி.. தென் ஆப்பிரிக்காவைக் காலி செய்து பைனலுக்குள் நுழைய இந்தியா திட்டம்!

மிர்பூர்: உலகக் கோப்பை டுவென்டி 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு இன்னும் ஒரே ஒரு போட்டிதான் பாக்கி உள்ளது. நாளை நடைபெறவுள்ள 2வது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி விட்டால் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விடலாம்.

தொடர்ந்து நான்கு போடடிகளில் வென்று நங்கூரமிட்டு நிற்கிறது இந்தியா. அதேபோல தென் ஆப்பிரிக்காவையும் அரை இறுதிப் போட்டியில் பந்தாடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்று பெரும் நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

அதிரடியாக தொடர்ந்து இந்தியா வென்று வருவதால் நாளை நடைபெறப் போகும் போட்டி குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கட்டுக்கோப்பான அணி

கட்டுக்கோப்பான அணி

இந்திய அணி இந்த நிமிடத்தில் கட்டுக்கோப்பான களேபரமான அணியாக திகழ்கிறது. அத்தனை பேரும் நல்ல பார்மில் உள்ளனர்.

யுவராஜுக்கு காயம்

யுவராஜுக்கு காயம்

ஆனால் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கில்லி மாதிரி ஆடிய யுவராஜ் சிங் காயமடைந்திருப்பது அணியைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

நாளைக்குள் சரியாகி விடுவார்

நாளைக்குள் சரியாகி விடுவார்

அதேசமயம் நாளைக்குள் யுவராஜ் சிங் சரியாகி விடுவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கால்பந்து விளையாடியபோது காயமடைந்து விட்டார் யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜிங்கியா இல்லாட்டி தவன் இல்லாட்டி வேற யாரு...

அஜிங்கியா இல்லாட்டி தவன் இல்லாட்டி வேற யாரு...

தற்போது தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் யாரை களம் இறக்குவது என்பதில் குழப்பம் உள்ளது. அஜிங்கியா ரஹானே கடைசிப் போட்டியில் ஆடினார். தவன் ரெஸ்ட் கொடுக்கப்பட்டார். நாளையும் ரஹானே இடம் பெறுவாரா அல்லது தவன் சேர்க்கப்படுவாரா என்பது தெரியவில்லை.

மொஹித் சர்மா இல்லாட்டி ஷமி

மொஹித் சர்மா இல்லாட்டி ஷமி

அதேபோல வேகப் பந்து வீச்சாளர்களில் மொஹித் சர்மா அல்லது முகம்மது ஷமி ஆகியோரில் ஒருவர் அணியில் இடம் பெறலாம்.

யுவராஜ் வராட்டி

யுவராஜ் வராட்டி

ஒரு வேளை நாளை யுவராஜ் சிங் இடம் பெறாமல் போனால் தவனும், ரஹானேவும் சேர்ந்து இடம் பெற வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்காவும் ரெடியாம்

தென் ஆப்பிரிக்காவும் ரெடியாம்

அதேசமயம், இந்தியாவின் சவாலை சந்தித்துக் கரையேற தாங்கள் தயாராக இருப்பதாக தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது. அந்த அணி சுற்றுப் போட்டிகளில் நான்கில் மூன்றில் வென்றுள்ளது.

சொகுசு சவாரி

சொகுசு சவாரி

இந்திய அணியைப் பொறுத்தவரை தான ஆடிய நான்கு போட்டிகளிலுமே கஷ்டமே இல்லாமல் எதிராலிகளை காலி செய்து விட்டு வந்துள்ளது. அதிலும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை அது நசுக்கி விட்டது.

நெதர்லாந்திடம் பயந்தவந்தாணடா நீ...

நெதர்லாந்திடம் பயந்தவந்தாணடா நீ...

ஆனால் தென் ஆப்பிரிக்கா தட்டுத் தடுமாறித்தான் அரை இறுதிக்கே வந்துள்ளது. நெதர்லாந்திடம் தோற்கும் நிலைக்குப் போய் வென்ற அணிதான் தென் ஆப்பிரிக்கா.

அதே அராத்து ஆட்டத்திற்கு இந்தியா திட்டம்

அதே அராத்து ஆட்டத்திற்கு இந்தியா திட்டம்

மறுபக்கம் இந்தியா, கடந்த நான்கு போட்டிகளிலும் எப்படி அதிரடியாக ஆடியதோ அதேபோல தென் ஆப்பிரிக்காவையும் அடித்து நொறுக்க ஆவலமாக உள்ளது. இந்தப் போட்டியிலும் அஸ்வின் தலைமையிலான சுழற்பந்து வீச்சாளர்கள் கைவரிசையைக் காட்ட தயாராகி வருகின்றனர்.

ஸ்பின்னா.. ஃபாஸ்ட்டா...

ஸ்பின்னா.. ஃபாஸ்ட்டா...

இந்தியாவின் ஸ்பின்னர்களுக்கும், ஸ்டெயின் தலைமையிலான தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது.

நாளை மாலை சரியா

நாளை மாலை சரியா

நாளை மாலை 6.30 மணிக்கு மிர்பூரில் போட்டி தொடங்குகிறது.

Story first published: Thursday, April 3, 2014, 16:42 [IST]
Other articles published on Apr 3, 2014
English summary
They are on a high after four victories on the trot but team combination and injury to Yuvraj Singh will be a worry for India as they go into the second semifinal of the ICC World Twenty20 against a determined South Africa, here tomorrow. While the Indian team management will be hoping that Yuvraj recovers fully from his ankle injury which he sustained during a football session, selecting the final XI could be a tricky proposition for them.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X