For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படியே 'வெடிகுண்டு' மாதிரி யுவராஜ் சிங்.. டோணி புகழாரம்

மிர்பூர்: யுவராஜ் சிங் மீண்டும் பார்முக்குத் திரும்பியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கேப்டன் டோணி, அவர் டுவென்டி 20 கிரிக்கெட்டில் ஒரு வெடிகுண்டு மாதிரி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மிகச் சரியான நேரத்தில் யுவராஜ் சிங் பார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும் டோணி தெரிவித்துள்ளார்.

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த நான்காவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இ்ந்திய அணியை தனது 43 பந்து 60 ரன்களால் அபார வெற்றிக்கு இட்டுச் சென்று விட்டார் யுவராஜ். ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் கூட எடுக்க விடாமல் கேவலப்படுத்தி அனுப்பி விட்டது இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் யுவராஜ் சிங்கை புகழ்ந்து பேசியுள்ளார் டோணி. அவரது பேச்சிலிருந்து...

சூப்பர் செய்தி

சூப்பர் செய்தி

யுவராஜ் சிங் பார்முக்குத் திரும்பியிருப்பது உண்மையிலேயே நல்ல செய்தி. அனைவருக்கும் யுவராஜ் சிங் எப்படிப்பட்டவர் என்பது தெரியும்.

இதுக்கு இவர்தான் சரிப்பட்டு வருவார்

இதுக்கு இவர்தான் சரிப்பட்டு வருவார்

இந்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் யுவி. இன்று அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

கலக்கி விட்டார்

கலக்கி விட்டார்

தொடக்கத்தில் அவரால் அடித்து ஆட முடயிவில்லை. காரணம், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு அப்போது எடுபட்டது. ஆனால் கடைசியில் யுவராஜ் சிங் கலக்கி விட்டார். அவரது அதிரடியைக் காட்டி விட்டார்.

தவனை உட்கார வைத்தது நல்லாதப் போச்சு

தவனை உட்கார வைத்தது நல்லாதப் போச்சு

ஷிகர் தவனை ஓய்வில் இருக்கச் சொல்லியது ஒரு வகையில் நல்லதாகி விட்டது. இதன் மூலம் யுவராஜ் சிங் தனது பார்மைப் பிடிக்க ஏதுவாகி விட்டது.

ரஹானேவும் சூப்பர்தான்

ரஹானேவும் சூப்பர்தான்

அவருக்குப் பதில் ரஹானாவே ஓபன் செய்யச் சொன்னோம். ரஹானே நெருக்கடியான நேரங்களில் சிறந்த தொடக்கத்தைக் கொடுப்பார். நல்ல நிலையான வீரரும் கூட. தற்போது கிடைத்துள்ள ஓய்வால் அடுத்தடுத்த போட்டிகளுக்கு தவன் தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றார் டோணி.

2 போட்டிகளில் சொதப்பிய யுவராஜ்

2 போட்டிகளில் சொதப்பிய யுவராஜ்

நேற்று சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங், தனது முதல் இரு போட்டிகளில் சரியாக ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ரன்னும், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 10 ரன்கள்தான் எடுத்திருந்தார்.

Story first published: Monday, March 31, 2014, 11:39 [IST]
Other articles published on Mar 31, 2014
English summary
Yuvraj Singh's return to form was the biggest positive for the Indian team ahead of knockout stage of the ICC World Twenty20, according to skipper Mahendra Singh Dhoni. Yuvraj roared back to form with a 43-ball knock of 60. His stroke-filled innings set up the 73-run victory over Australia as India topped Group 2 with fourth consecutive win.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X