For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையால் தடை செய்யப்பட்ட 32 பேர் (புலிகள் உள்பட) இந்தியாவில்.. கைது செய்ய மும்முரம்!!

Google Oneindia Tamil News

32 Lankans living in India on the list of banned LTTE remnants
கொழும்பு: தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர் அமைப்பை சேர்ந்தோரில் 32 பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரானது 2009 இல் முடிவுற்றது.

வெளிநாட்டிலிருந்து செயல்படும் விடுதலை புலிகள் உள்ளிட்ட 16 தமிழ் அமைப்புகள் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறி விடுதலை புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கும் இவற்றின் நிர்வாகிகள் 422 பேருக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்டோர் இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாக கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 32 பேர் இருப்பதாகவும் இவர்களை கைது செய்ய சர்வதேச போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய புலனாய்வுத் துறை தலைவர் கபிலா இதனைப்பற்றி கூறியபோது, " குளோபல் தமிழ் அமைப்பு, பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ஆகிய பெயர்களில் செயல்படும் விடுதலை புலிகள் மற்றும் ஆதரவாளர்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசை அடிக்கடி சந்திக்கின்றனர்.

தென் ஆப்ரிக்க தலைவர் மண்டேலாவின் இறுதி சடங்கில் பங்கேற்க குளோபல் தமிழ் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வெளிநாட்டு அரசுகளை கேட்டுள்ளோம்"என்று தெரிவித்துள்ளார்.

English summary
Thirty two Sri Lankans currently residing in India are among 422 individuals named by the Sri Lankan government as members of the banned LTTE offshoots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X