For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எபோலா பயம்: நைஜீரியா உள்ளிட்ட 4 நாடுகளின் வருகை விசாவை தடை செய்தது இலங்கை

Google Oneindia Tamil News

கொழும்பு: எபோலா பயம் காரணமாக நான்கு குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கான விசாவை தற்காலிகமாக அந்நாடு தடை செய்துள்ளது.

பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா காய்ச்சலுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ebola: Sri Lanka suspended on-arrival visa for 4 African nations

மேலும், இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா நோய் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக விமான நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், எபோலா பாதிப்புள்ள நான்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கான விசாவை அந்நாடு தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நைஜீரியா, லிபியா, கினியா மற்றும் சியரா லியோன் உள்ளிட்டவை இலங்கையால் விசா தடை செய்யப்பட்ட நாடுகள் ஆகும்.

இலங்கையில் எபோலா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாடு விளக்கமளித்துள்ளது.

English summary
Sri Lanka has suspended on-arrival visa facility for visitors from four African countries in the wake of Ebola epidemic in Africa, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X