For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவிபிள்ளையின் நாயைக் கூட அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் திமிர்தனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொழும்பு: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மட்டுமல்ல அவரது நாய்கூட இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா திமிராக கூறியுள்ளார்.

இலங்கை பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கூறியதாவது: எங்களுக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. நாட்டின் உள் விவகாரங்களில் அயல்நாட்டினர் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

Even Madam Pillay’s dog will not be allowed to conduct investigations here – Nimal Siripala

எமது வீட்டில் பிரச்னை இருந்தால் நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். எமது நாட்டில் பிரச்னை இருந்தால் நாமே அதற்கும் தீர்வினை காண வேண்டும். இதன் காரணமாகவே ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராக அந்த தீர்மானத்துக்கு எதிராக ஜெனிவாவில் போராடினோம்.

நவநீதம்பிள்ளை அம்மையார் அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளோம்.

ஏனெனில் ஜனாதிபதி ராஜபக்சே, நாட்டின் சுயாதீனத்தன்மை, இறையாண்மை மற்றும் மகத்துவத்தை பாதுகாப்பதற்கும் நாட்டின் அபிமானத்தை பாதுகாப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒருவரவார்" என்றும் அவர் பேசியுள்ளார்.

English summary
Minister Nimal Siripala de Silva, the Leader of the House, reiterates that the UN High Commissioner for Human Rights, will never be allowed to intervene in the internal affairs of Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X