இலங்கை செய்திகள்
ஈழத் தமிழர்களுக்கு ஒரு அதிகாரமும் தர மாட்டோம்- இலங்கை திமிர் பேச்சுகொழும்பு: தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நிலம் மற்றும் காவல் அதிகாரங்களை வழங்கும் பேச்சுக்கே இடமில்லை, அதற்கு நாங்கள் தயாரும் இல்லை என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் முகத்தில் அடித்தாற் போல கூறியுள்ளது இலங்கை அரசு.இதுதொடர்பாக இந்திய எம்.பிக்களிடம் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறுகையில், இந்திய மாநிலங்களில் அமலில் உள்ள போலீஸ் அதிகாரங்களை
மாயமான பிள்ளைகளை மீட்டுக் கொடுங்களேன்- இந்திய குழுவிடம் மன்றாடிய தமிழர்கள்கொழும்பு: விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு மெனிக்பாம் முகாமில் உள்ள தமிழர்கள் இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவை கேட்டுக்கொண்டனர்.பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு கடந்த 16ம் தேதி இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. அவர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போருக்குப் பின்
ஈழம் குறித்துப் பேசும் கருணாநிதி பயங்கரவாதி- சொல்கிறார் கோத்தபயாகொழும்பு: ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். தழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என ராஜபக்சேவி்ன் தம்பி கோத்தபயா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால்
இன்று மாலை ராஜபக்சேவுடன் இந்திய எம்.பிக்கள் குழு- என்ன பேசுவார்கள்?யாழ்ப்பாணம்: இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பிக்கள் குழு இன்று மாலை ராஜபக்சேவை சந்திக்கவுள்ளது. முன்னதாக காலை உணவுடன் நாளை சந்திப்பதாக இருந்த இந்த சந்திப்பு இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது.இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பிக்கள் தங்களது பயணத்தின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டனர். இன்று மாலை ராஜபக்சேவை அவர்கள் சந்திக்கின்றனர். அதன் பின்னர் நாளை கொழும்பில் செய்தியாளர்களைச்
'அக்யூஸ்ட்' டக்ளஸ் 'ஈழத்து எம்.ஜி.ஆராம்'-காங். எம்.பி. புளகாங்கித புகழாரம்!!யாழ்ப்பாணம்: சென்னையில் கொலை வழக்கில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வரும் டக்ளஸ் தேவானந்தாவை ஈழத்து எம்.ஜி.ஆர். என்று அழைத்து ஈழத் தமிழர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கேவலப்படுத்தியுள்ளார் தமிழக காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்.இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணம் வந்தனர். அங்கேயே
