For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே அமைச்சரவையில் 2 தமிழ் எம்.பி.க்களுக்கு துணை அமைச்சர் பதவி - பின்னணியில் ‘யுவா’ தேர்தல்?

Google Oneindia Tamil News

Mahinda Rajapaksa appoints two Indian origin Tamil MPs as Deputy Ministers
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தனது அமைச்சரவையில் இரண்டு தமிழ் எம்.பி.க்களை துணை அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

தமிழர்கள் அதிக அளவில் வாழும் யுவா மாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி மாகாண கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தனது அமைச்சரவையில் பிரபா கணேசன் மற்றும் பி. திகாம்பரம் ஆகிய இரண்டு தமிழ் எம்.பி.க்களை துணை அமைச்சர்களாக்கியுள்ளார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. இன்று அவர்கள் ராஜபக்சே அலுவலகத்தில் அவர்கள் துணை அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபா கணேசன் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சராகவும், திகாம்பரம் தேசிய தொழிலாளர்கள் யூனியன் துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுவா மாகாணத் தேர்தலையொட்டியே தமிழர்களை ஈர்க்கும் விதமாக இரண்டு எம்.பிக்களுக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப் பட்டிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Two Indian-origin Tamil lawmakers were today inducted as Deputy Ministers in Sri Lankan President Mahinda Rajapaksa's cabinet, a month ahead of polls in a province where a large number of ethnic Tamils live.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X