For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கான இலங்கை தூதராக சுதர்சன் செனவிரத்ன நியமனம்!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதராக பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அவரிடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நேற்று வழங்கினார்.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக 2009-ஆம் ஆண்டு முதல் பிரசாத் கரியவாஸம் பணியாற்றினார். அவர் தற்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதராக மாற்றப்பட்டுள்ளார்.

Prof. Sudarshan, new SL High Commissioner to India

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தொல்லியல் துறை ஆய்வாளரான சுதர்சன் செனவிரத்ன, இலங்கையின் பெரதனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இலங்கை தொல்லியல் துறையின் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இந்தியாவுக்கான இலங்கை தூதர் நியமன உத்தரவை நேற்று அவரிடம் ராஜபக்சே வழங்கினார். விரைவில் அவர் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பொறுப்பேற்க இருக்கிறார்.

English summary
Prof. Sudarshan Senevirathne has been appointed as the new High Commissioner for Sri Lanka to India, announced by the Sri lanka Government Information Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X