For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவு - சுதந்திர தினத்தையொட்டி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறப்பு உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 93 மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை 225 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. ஆனாலும் அடுத்தடுத்து கைதுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார்.</p>— Mahinda Rajapaksa (@PresRajapaksa) <a href="https://twitter.com/PresRajapaksa/statuses/499530268823146498">August 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அதாவது ஏதாவது காரணத்தைச் சொல்லி நல்லெண்ணம் என்று கூறி விடுவிப்பதும், காரணமே இல்லாமல் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்திய சுதந்திர தினத்தையொட்டி விடுவிப்பதாக கூறியுள்ளது இலங்கை அரசு.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 93 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>On the occasion of India's Independence Day, President Rajapaksa orders the release of Indian fishermen in Sri Lankan custody.</p>— Mahinda Rajapaksa (@PresRajapaksa) <a href="https://twitter.com/PresRajapaksa/statuses/499528815216193536">August 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இப்படி அவர் கடிதம் எழுதியதைக் கூட கிண்டலடித்து படு கேவலமாக சித்தரித்து இலங்கை அரசின் இணையதளம் அசிங்கமாக நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.

93 மீனவர்கள் தவிர அவர்களின் 62 படகுகளும் இலங்கை வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa today has ordered the release of all Indian fishermen in Sri Lankan custody. He has given the order on the occasion of India's Independence Day, which is observed on August 15, a message on his official Twitter account said. A total of 93 fishermen from Tamil Nadu are in Sri Lanka custody currently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X