For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை கட்டுரை அவமதிக்கவில்லையே... இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் குசும்புப் பேச்சு!

Google Oneindia Tamil News

SL army refutes the article on Jayalalitha is derogatory
கொழும்பு: தமிவக முதல்வரையோ அல்லது வேறு எந்த இந்தியத் தலைவரையுமோ அவமரியாதை செய்யும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கட்டுரை எதுவும் இடம்பெறவில்லை. சம்பந்தப்பட்ட கட்டுரையில் மீனவர் பிரச்சினை தொடர்பாகவும், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாகவும்தான் இடம் பெற்றிருந்தது என்று பேசியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரியா.

அந்த கட்டுரைக்கு மேலே போட்டிருந்த கேவலமான படம் பற்றியும் கூட அவர் நியாயமானதே என்றும் கூறியுள்ளார். அந்த கட்டுரைக்கு வைத்திருந்த தலைப்பும் கூட தவறானதாக இல்லையே என்பதும் வணிகசூர்யாவின் வாய் கூறும் விளக்கம்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்துக்களும் பாதுகாப்பு இணையதளத்தில் வெளியாகவில்லை.

பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவதூறான கருத்துக்கள் இடம்பெறவில்லை. அந்தக் கட்டுரையில் இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும், சேது சமுத்திர திட்டம் குறித்தும் தெற்காசிய கடற்பிராந்தியத்தில் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களுமே இடம்பெற்றிருந்தது.

இந்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் எவையும் அதில் இடம்பெறவில்லை. இந்த கட்டுரை தொடர்பாக எதிர்ப்பு வெளியிட்டவர்களில் நூற்றுக்கு 90 சதவீதம் பேர்கள் இணைய தளத்தில் வெளியான கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை.

அவர்கள் அந்த கட்டுரையுடன் வெளியான ஒளிப்படத்தை பார்த்தே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உண்மையில் குறித்த படம் பாதுகாப்பு இணையத்தளத்தினை பராம

ரிக்கும் நபரின் ஊடாகவே பதிவேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

English summary
SL army's spokesman Ruwan Vanikasoorya has refuted that the article on its website on CM Jayalalitha was derogatory
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X