For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்வேம்: இலங்கை உறுதி

Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இலங்கை நடந்து கொள்ளும் என இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் செயலிற்கு நன்றிக்கடன் செலுத்துவதைப் போன்று, இலங்கைச் சிறையில் இருந்த தமிழக மீனவர்களை அந்நாடு விடுதலை செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் இலங்கை அமைச்சரும், மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியுமான மகிந்தா சமரசிங்கே, ‘இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இலங்கை நடந்து கொள்ளும்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முந்தைய இரண்டு வாக்கெடுப்புகளிலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்ததாக மகிந்தா சமரசிங்கே நினைவு கூர்ந்துள்ளார்.

English summary
Sri Lanka must build on the goodwill shown by India at the UNHRC where it abstained from voting on a resolution against Colombo, President Mahinda Rajapaksa's human rights envoy said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X